ஐந்து பெண்கள்

‘’என்ன சொல்கிறாய்..? பேரழிவா? ஏ மூதாட்டியே, அது இயற்கையாக நேரிட்டிருக்கும் பேரழிவென்றா சொல்கிறாய்? அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான ஒரு சண்டயில் பெரிய பெரிய அரசர்களெல்லாம் பங்கெடுத்துக் கொண்டார்கள். சிலர் ஒரு பக்கம் இருந்தார்கள்; வேறு சிலர் எதிர்த் தரப்புக்குச் சென்றுவிட்டார்கள்…

சௌவாலி

‘’இல்லையென்றால் அவருடைய ஆன்மாவுக்கு முக்தியும் விடுதலையும் கிடைக்காதே? தாதிபுத்ரா ! ஓர் அடிமையின் குழந்தை நீ..! ஆனால் இன்று இந்தத் தாதிபுத்திரன் வழியாகத்தான் அவருக்கு ஒரு மகன் கையிலிருந்து எள்ளும் தண்ணீரும் கிடைத்திருக்கிறது. ஹ்ம்…குந்தி…காந்தாரி ! இத்தனை வருடங்களில் காந்தாரி ஒரு தடவை கூட உன்னை ஒரு கௌரவனாக நினைத்ததே இல்லையே. அவள் எப்படி நினைப்பாள்? அவளைப் பொறுத்தவரை நீ ஒரு தாதிபுத்திரன்தான்’’

அர்ஜுன்

நாளின் இறுதியில் நான்கு துண்டுகள் — மரத்தை வெட்டினாலும், மனிதர்களை வெட்டினாலும்… இன்னும் சொல்லப் போனால், மனிதனை வெட்டுவது சுலபம் தான். ஏன் யாரும் அவனிடம் அதைச் சொல்வதில்லை என்று தனக்குள் கேட்டுக் கொண்டான். அதனால் அவனுக்கு முழு நான்கு ரூபாய் கிடைக்குமே!