மகரந்தம்

அப்படி ஒரு நாட்டில் மருந்து நிறுவனங்கள் புற்று நோய் மருந்துகளை, இரண்டே அளவுகளில்தான் தயாரிக்கிறார்களாம். அவையோ ஆட்களின் உயரம், வயது, எடை ஆகியனவற்றுக்குத் தக்கபடி முழு அல்லது குறைந்த அளவுகளில்தான் கொடுக்கப்பட முடியும். இவை ஊசி மருந்துகள் என்பதால் ஒரு முறை ஒரு புட்டியை ஊசியால் துளைத்து மருந்தை வெளியே எடுத்து விட்டால் மறுபடி அந்த மருந்து பாட்டிலில் எஞ்சியதை எடுத்துப் பயன்படுத்த முடியாது, சட்டப்படியும் மருத்துவ விதிகளின்படியும் அது குற்றம். எனவே ஏராளமான புட்டிகளில் உள்ள மீதி மருந்து அப்படியே குப்பையில் வீசப்படுகிறது

குளக்கரை

அமெரிக்கப் பண முதலைகள் மக்களை எப்படி எல்லாம் எத்துகின்றன? அதற்கென்று ஒரு மொத்த மாநிலமே இயங்குகிறது. பெரும் நிறுவனங்கள் இங்கு வரி கேட்காத அமைப்பாக மாநிலத்தையே ஆக்கி வைத்திருக்கின்றன. இங்கு லெட்டர்பாட் நிறுவனங்கள் ஏராளம். ஒரு தபால் பெட்டி எண் மட்டும் வைத்துக் கொண்டு, இந்த மாநிலத்தைத் தம் பதிவு அலுவலக முகவரியாக அறிவித்து விட்டு லாபங்களுக்கு சல்லி டாலர் கூட வரி கொடாமல் நிறுவனங்கள் தப்பிக்க வழி இருக்கிறது.

குளக்கரை

கட்டுரையாசிரியர் சுட்டுவதைப் பார்த்தால் அமெரிக்க ராணுவமுமே இன்று ஒரு முச்சந்தியில் நின்று எப்படி முன் செல்வது என்ற தவிப்பில் இருப்பது புலனாகிறது. தொடர்ந்து ஆயுதங்களை மேம்படுத்தும் தொழில் நுட்பத் திறனால்தான் அமெரிக்க ராணுவம் இன்னும் உலகில் முன்னணி ராணுவமாக இருக்கிறது. அதன் வீரர்கள் படிப்படியாக ஆயுதங்களுடைய உதவியாளர்களாக மாறிவருகிறார்கள். இப்படி ஆயுதங்கள் பெரும் எட்டு முன்னே எடுத்து வைக்க அவற்றிற்குத் தேவையாக இருப்பது என்ன, அந்த வகைக் கனிமங்கள் எப்படி பெருமளவு சீனாவின் கைப்பிடியில் உள்ள சுரங்கங்களில்தான் கிட்டும், அப்படிச் சீனாவுக்கு அமெரிக்க ராணுவத் தொழில் நுட்பத்தை அடகு வைப்பது அமெரிக்க ராணுவத்தை செல்லாக் காசாக்கி விடும் என்று புலம்புகிறார் இந்த அமெரிக்க ராணுவத் தொழில் நுட்பத் துறையில் ஆய்வு செய்பவர்.

வாசகர் மறுவினை

நான் மறைந்த நண்பர்களுக்கு அஞ்சலிக்கட்டுரைகள் எழுதி எழுதி இப்போது நான் ஒரு ‘சரமக்கவிராயர்’ ஆகிவிட்டேன்! நேற்று டிஸ்கவரி-நவீன விருட்சம் நடத்திய வெ.சா. அஞ்சலிக்கூட்டத்தை ‘தலைமைப்புரோகிதராக’ இருந்து நடத்திவைத்தேன். இன்று ’உயிர்மை’ மனுஷ்ய புத்திரன் தொடர்புகொண்டு ‘வெ.சா.வுடன் நெருங்கிப்பழகியவர் நீங்கள். அடுத்த இதழுக்கு ஒரு அஞ்சலிக்கட்டுரை ஒன்று அனுப்புங்களேன்!’ என்று கேட்டிருக்கிறார். இப்போதெல்லாம் படிப்பதும் எழுதுவதும் பெரும்பாடாக இருக்கிறது. I am afraid it’s mental menopause at this old age!