ஆன் கார்சன் சாஃபோ மற்றும் யூரிபிடிஸ் போன்ற கிரேக்க செவ்வியல் எழுத்தாளர்களின் பல அதிகம் அறியப்படாத படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். மூலத்தின் அனுபவம் சிதையாமல் நவீன கவிதைகளுக்கான நடையில் கூரிய மொழியில் மொழியாக்கம் செய்திருக்கிறார். வேர்ச்சொல் (Etymology) ஆய்வே தனது ஆக்கங்களின் தொடக்கப் புள்ளி எனக் கருதுகிறார்.பலவகை இலக்கிய வகைமைகளின் இலக்கணங்களுக்கிடையேயான எல்லைக்கோடுகளை மீறிய கவிதைகள், கட்டுரைகள், லிப்ரெட்டோக்கள்(ஓபரா, பேலே (Ballet) போன்ற இசை நாடகங்களுக்கான பாடல்கள், வசனங்கள் அடங்கிய உரை) உரைநடை விமர்சனங்கள் மற்றும் கவிதை நாவல்களையும் படைத்துள்ளார்.
