வாழ்த்துகள் – வினோத் குமார் சுக்லா

பாரதத்தின் மிக உயரிய  இலக்கிய விருதான ஞானபீட விருது இந்த ஆண்டு திரு வினோத் குமார் சுக்லா அவர்களுக்கு வழங்கப்படுகிறது. 

மாய யதார்த்த பாணியில் கவிதை எழுதும் திரு வினோத்குமார் சுக்லா 1937 இல் பிறந்தார். 1999இல் தனது நாவல் ‘தீவார் மே ஏக் கிட்கீ ரஹதீ தீ’ (சுவற்றில் ஒரு ஜன்னல் இருந்தது) க்காக இவர் சாகித்ய அகாடமி விருதையும் பெற்றார்.

திரு வினோத்குமார் சுக்லா ராஜ் நந்த் காவ் (சத்தீஸ்கர்) இன்னும் கிராமத்தில் பிறந்தார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு 1971 ஆம் ஆண்டு வெளிவந்தது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து 1981 இல் இவரது இரண்டாம் கவிதை தொகுப்பு வெளியானது. வேளாண்மையில் முதுகலை பட்டம் பெற்ற இவர் ராய்ப்பூர் வேளாண்மைக் கல்லூரியில் சில காலம் ஆசிரியராக பணியாற்றினார். இவருடைய கவிதை தொகுப்புகள் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய குமாஸ்தாவின் மேலங்கி என்னும் நாவல் மணி கால் என்பவரால் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. “நான் நிறைய பார்த்திருந்தாலும், நிறைய கேட்டிருந்தாலும், நிறைய அனுபவித்து இருந்தாலும், மிகக் குறைவாகவே எழுதி இருக்கிறேன். எழுத இன்னும் நிறைய இருக்கிறது. என்னுடைய வாழ்நாளில் நான் நினைப்பதை எழுதி முடித்து விட முடியாது என்று நினைக்கிறேன். எப்படி வேகமாக எழுதுவது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறேன். என்னுடைய எழுத்தின் வாயிலாகவே நான் என் வாழ்க்கையை நடத்திச் சொல்ல விரும்புகிறேன். வெகு சீக்கிரமாக முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும் என் வாழ்க்கையில் நான் எழுதாமல் விட்டு விட்டதற்காக எந்த மனக்குறையும் இல்லாமல் இறக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்கிறார் திரு வினோத்குமார் சுக்லா. ஞானபீட விருது பெற்ற மற்றுமொரு எழுத்தாளரான முக்தி போதின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட திரு வினோத்குமார் சுக்லா, பள்ளி இறுதி தேர்வில் ஹிந்தி பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெற்றிருந்தால் நான் பொறியாளராகவோ மருத்துவராகவோ ஆகியிருப்பேன் என்று வேடிக்கையாக கூறுகிறார் திரு சுக்லா. எழுத வேண்டிய அவசியத்தை உணரும் போது மட்டுமே எழுதுவதாக கூறும் திரு சுக்லா, சாமானியர்களின் மிகச் சாதாரண இருப்பை தன் எழுத்துக்களில், மிக அற்புதமாக மனதைத் தொடும் விதத்தில் ஆடம்பரமற்ற சாதாரண எழுத்தில் பதிவு செய்கிறார்.

தொடர்புள்ள பதிவு:

 என் சிறிய அறை 

இந்த சிறிய அறை தான் என்னுடைய அறை. 

களைத்துப் போன நாற்காலி.

இரவு முழுவதும் விழித்திருக்கும் கட்டில். இந்தத் தரை அவதியுற்று அல்லல் பட்டு அதோ அந்த  மூலை வரை பரந்திருக்கிறது.

இந்த அறையில் நான் ஒரு தத்துவவாதியைப் போல இருக்கவில்லை. சாதாரண குடியிருப்பவனைப் போலவே இருக்கிறேன். 

(1961)


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

4 Replies to “வாழ்த்துகள் – வினோத் குமார் சுக்லா”

Leave a Reply to எஸ்ஸார்சிCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.