சூர்யமித்திரன் கவிதை

கனவுகளின்
போர்வைக்குள்
காட்சிகள் நகர
வீதிதோறும்
நீர்த்தடம்
சிறுகுன்றின்
மீதேறி
சுற்றும் பார்த்து
பாயும் வெள்ளத்தின்
நதிமூலம்
ஆராய்கிறது
தூக்கத்துமனம்.

மணித்துளிகளில்
காட்சி மாறி
பனிப்போர்வைக்குள்
பதுங்கும்
கனவுத்தொடர்ச்சி
நடுங்கும் குளிரில்
உடம்பெல்லாம்
கம்பளி இழைகள்
ஊடோடிய பருத்தி
இழை சால்வையில்
சம்மணமிட்டது
கலைந்த கனவு.


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

2 Replies to “சூர்யமித்திரன் கவிதை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.