மண்டாலா ஓவியங்கள்

மண்டாலா என்றால் சமஸ்கிருதத்தில் “வட்டம்” என்று அர்த்தமாகும். காலச்சக்கரம் என்றும் மண்டாலா ஓவியங்களை அழைக்கிறார்கள். இந்து மதத்திலும் பௌத்தத்திலும் இவை வழிபாட்டு முக்கியத்துவம் பெற்றவை. மிகுந்த பொறுமையுடன் கணித சாஸ்திரங்களையும் தியான நியமங்ளையும் பின்பற்றி பத்து நாள்களில் இவை முழுமையடைகின்றன. காலை முதல் மாலை வரை ஏழு புத்த துறவிகளின் முழு கவனத்தைக் கோரும் ஒரு மண்டாலா, முழுவதுமாக உருவாக நான்கு நாள்கள் ஆகின்றன. மெல்லிய வண்ண மூங்கில் குழல்களால் துளித் துளியாக வண்ண மணல்களை தேய்த்து, நுணுக்கமான கோலமாக இவை தயார் ஆகின்றன.
அகம், புறம், பிரபஞ்சம் என மூன்று நிலைகளில் காலத்தை பௌத்தம் வகுக்கிறது. புரிந்த கால அளவுகளையும், தெரிந்த கோள்களையும், தெரியாத சூட்சுமமான தாமரை அடுக்குகளில் விஷ்ணு/ புத்தர் இருக்கும் சக்தி நிலையுடன் நம்முடைய உடலை மனதுடன் இணைக்கும் நிலைக்கு இந்த மண்டாலா உறுதுணை வகிக்கும். அந்தக் காலச்சகரம் நான்காவது நாளில் இருந்து பொதுப் பார்வையில் இருக்கும். இந்த மண்டாலா, பத்தாம் நாள் இறுதியில் முழுவதுமாகக் கலைக்கப்பட்டு, தண்ணீரில் கலைக்கப்படுகின்றன. கடற்கரையில் உருவாகும் மணல் கோட்டை கலைவது போல் இந்த அரிய அற்புத படைப்பும் அழிந்து போவது குறியீடாக உள்ளது.
அவற்றில் சில மண்டாலாக்களை இங்கு பார்க்கலாம்.
Mandala_Sri_Chakra_Kanya_Kolam_Designs_Pattern_Tibet_Dalai_Lama_Unity_Cosmic_Conscieneness