kamagra paypal


முகப்பு » அறிவிப்பு, ஆளுமை, இணையதள அறிமுகம்

அறிவிப்புகள்

சாகித்ய அக்காதமி விருது பெற்ற தெலுங்கு பெண் எழுத்தாளர் ஒல்கா

Telugu_Writers_Volga_Authors_Female_Indian_Sahitya_Prizes_OLGA

விமுக்தா” என்ற கதைத் தொகுப்பிற்காக திருமதி ஒல்கா சாகித்ய அக்காதமி விருதை பெறுகிறார்.  இந்தக் கதைத் தொகுப்பில் இருக்கும் கதைகள் ராமாயண இதிகாசத்தின் பின்னணியில் சீதை சூத்ரதாரியாக சொல்லப்பட்டவை.

காலம் மாறிக்கொண்டு வருகிறது. அதற்கு ஏற்றபடி தர்மங்கள், சம்பிரதாயங்கள், ஆசாரங்கள் மாறிக்கொண்டுதான் இருக்கும். ஒரு காலத்து தர்மங்கள் இப்போது அர்த்தமற்றவை, அநியாயமானவை என்று  சொல்வதற்காகத்தான் அன்று முதல் இன்று வரையில் பலர் புராணக் கதைகளை புதிய கோணத்தில்  எழுதுகிறார்கள். புதிய விளக்கம் உருவாக்குகிறார்கள்.

இந்த கதைகளில் வரும் ஐந்து பெண்களை தன்னுடைய நெருங்கிய சிநேகிதிகளாக ஆக்கிக் கொண்டதாக ஒல்கா சொல்கிறார்.. சீதை, சூர்ப்பனகை, அகல்யா, ரேணுகா, ஊர்மிளா.

இந்தச் சிநேகிதிகள் சகப்பெண்களுக்கு வலிமையை, தைரியத்தை, விவேகத்தை வழங்குவார்கள் என்பது அவருடைய நம்பிக்கை.

“சிறைப் பட்டவன்” என்ற கதை ராமனின் நிலையை, விளக்குகிறார்.

இந்த கதைத் தொகுப்பினை தமிழாக்கம் செய்து ஒல்காவின் படைப்புகளை தமிழ் வாசகர்களுக்கு கெளரி கிருபானந்தன் அறிமுகம் செய்திருக்கிறார்.

  1. மீட்சி
  2. சுஜாதா
  3. தொடுவானம் தொட்டு விடும் தூரம் (திண்ணை இணைய இதழில் தொடராக வெளி வந்தது)
  4. 4..ஒரு பெண்ணின் கதை  (கதைத் தொகுப்பு)

Volga_Books_Gouri_Kirubanandham_Olga_Thoduvaanam

பாரதி புத்தகாலயம் இவற்றை பதிப்பித்து உள்ளது. ( 7, இளங்கோ சாலை,  தேனாம்பேட்டை, சென்னை – 600018,. தொலைபேசி:+91 44 2433 2424)

 

oOo

திசைகள் வலையகம்

Thisaigal_Dhisaigal_Web_Books_Library_Publishers_Media_Sites_Internet_Tamil

நூல்கள், செய்திகள், மின்னிதழ்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள், உரைகள், எழுத்தாளர்களின் பேட்டிகள் இவற்றை நீங்கள் ஒரே இடத்தில் வாசிக்க உதவும் இணையதளம். சுருக்கமாகச் சொன்னால் உங்கள் கையில் வான் வழியே ஒரு வாசகசாலை. திசைகள் தளம் மின்னூல்களைப் பதிப்பிக்கிறது. சொல் சார்ந்தவை (text based) , ஓவியங்கள், புகைப்படங்கள் கொண்டு மெருக்கூட்டப்பட்டவை (image based), காணொளிக் காட்சிகள் கொண்டவை (video books) என்று எல்லா வகையான நூல்களும் பதிப்பிக்கப்படும்.

உங்கள் படைப்புக்களை யூனிகோட் எழுத்துருவில் தட்டச்சு செய்து doc கோப்புகளாகவோ,txt கோப்புகளாகவோ editor@thisaigal.in என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் குழு அவற்றின் தரம் சார்ந்து அவற்றை பதிப்பிற்கு ஏற்கும்.

மின்னூல்கள் வெளியீட்டையும், மின்வெளியில் தமிழ் வாசிப்பபையும் அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கம். இன்று இணையத்தில் தமிழ் அருகுபோல் வேரோடி, ஆல் போல் தழைத்து நிற்கிறது. இணையத்தில் தமிழ் தழைத்திருக்கிற இந்த நேரத்தின் தேவை, அந்த எழுத்துக்கள் உதிரி உதிரியாகச் சிதறிப் போய்விடாமல் அவற்றை ஒரு வளமாகத் தொகுப்பது. நிகழ்கால நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தவும், எதிர்காலத்திற்கு இவற்றை ஓரிடத்தில் சேமித்து வைக்கவும் ஓர் களஞ்சியம் தேவை. அதற்கான முயற்சி இது.

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.