பாலியல் வன்முறை – தடுப்பு நடவடிக்கைகளுக்கான திருப்புமுனை

இந்தியாவில், வன்புணர்வுக் குற்றம் குறித்து பெண்கள் புகார் செய்கையில், பெரும்பாலும், குற்றத்துக்கு அவர்களே பொறுப்பு என்று பழி சுமத்தப்படுகிறது. தப்பித் தவறி அந்தப் புகார் செவிமடுக்கப்பட்டாலும், அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீண்டு வந்து கொண்டிருக்கையில், வெகு தாமதமாகவே கேட்கப்படுகிறது. மன அதிர்ச்சியிலிருந்தும், உடல் நோவிலிருந்தும் வெளிப்படுவதற்கே மிகுந்த தைரியமும், உளவியல் ஆலோசனை சேவைகளும் தேவைப்படும். வசதியற்ற கீழ்மட்ட சமூகங்களின் பெண்களுக்கு இத்தகைய உதவிகள் கிடைக்க என்ன செய்யப்பட்டிருக்கிறது? அவர்களுக்கு எங்கே போகவேண்டும் என்றும் தெரியாது, தரமான சேவைகளைப் பெறப் பணம் செலவழிக்கவும் இயலாது.

பால்வழி குற்றத் தடுப்பு

பேராசிரியர் மங்கை நடராஜன் நியுயார்க் மாநிலத்தின் சிடி யுனிவர்ஸிடி பல்கலை அமைப்பில் ஒரு அங்கமான, புகழ் பெற்ற, ஜான் ஜேய் காலேஜ் ஆஃப் க்ரிமினல் ஜஸ்டிஸ் என்ற கல்லூரியில் இளங்கலைப் பட்டப் படிப்புக்கு இயக்குநராக இருக்கிறார். இந்தக் கட்டுரை, ஐக்கிய நாட்டுச் சபையின் 12ஆவது பேரவையில் குற்றத் தடுப்பும், குற்றத்துக்கு நீதியும் ஆகிய கருதுபொருளில் நடந்த கருத்தரங்கில் ஆற்றிய ஒரு உரையின் அண்மையான தழுவலாக எழுதப்பட்டது.