ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி… 

This entry is part 1 of 4 in the series ஆத்தோரம் மணலெடுத்து

தாத்தா தான் அவனுக்கு அப்பா. அவன் டிஎன்ஏயில் பாதி பங்கைக் கொடுத்து, நிகில் என்ற பெயரையும் வைத்தவர் அவனுடைய முதல் பிறந்தநாளுக்கு முன்பே சாலை விபத்துகளில் இறந்தவர்கள் கணக்கில் சேர்ந்துவிட்டார். அந்த அதிர்ச்சியில் இருந்து அவன் அம்மா மீளவில்லை. அவள் மன ஆறுதலுக்கு பரதநாட்டியப் பள்ளி. வீட்டின் தரைத்தளத்தில் இருந்து வரும் சலங்கையோசைக்கு நிகில் பழகிவிட்டான். தேர்வுகளுக்குத் தயார்செய்யும்போது கூட அது இடையூறாக இருந்தது இல்லை.