இச்சா, இனியா, காயா, பழமா?

உளவியலின் மற்றொரு முக்கியப் பிரிவு, ஆய்வகங்களில் அறிவியல் நிரூபணங்களின் மூலம் இதை உறுதி செய்ய முடியும் என நம்பியது. உளவியல் பகுப்பாய்வாளர்கள் போலவே, பரிசோதனை உளவியலாளர்கள், மனிதரின் அக அனுபவத் துல்லியத்தை, அறிவியல் ரீதியாகச் சொல்ல முடியும் என்றார்கள். அளக்கக்கூடிய புற நிலை உடல் செயற்பாடுகள், அகநிலையின் வெளிப்பாடுகளே என்ற அவர்களது கொள்கையால் அவர்கள் உளப்பகுப்பாய்வாளர்களிலிருந்து மாறுபட்டனர். ஜான் வாட்சனின் ‘நடத்தை விதிகள்’ மூலம், மிகப் பிடிவாதமாக, தனியான அகநிலை என்ற கருத்தை கிட்டத்தட்ட மறுத்து, ‘உணர்வு’ என்பது பிரதிபலிப்புகளின் கூட்டமைப்பு என்ற முடிவிற்கு வந்தார்கள்.