9. ஒருங்கிணைப்பின் வழியே

அஹ்ரிமான் சிலையின் நான்கு சிறகுகள், நான்கு பருவங்களின் சின்னங்களைத் தாங்கியுள்ளன. இடியின் சின்னம் அவரது மார்பில் பொறிக்கப்பட்டுள்ளது. சிலையின் அடிப்பகுதியில் தீயின் தெய்வமான  வல்கனின் (Vulgan) சுத்தியல் மற்றும் இடுக்கியும் – மெர்க்குரி தெய்வத்தின் சேவல் மற்றும் கோல் (கடுசியஸ்) உள்ளன. மெர்க்குரி வணிகம், சொல்லாற்றல், தகவல் தொடர்பு, பயணிகள், எல்லைகள், அதிர்ஷ்டம், தந்திரம் ஆகியவற்றுக்கும், ஆன்மாக்களை பாதாள உலகத்திற்கு வழிகாட்டி அழைத்தும் செல்லும் தெய்வம்