எரியும் காட்டுக்குள் ஆழப் போனேன். என்னைச் சுற்றி எங்கும் மஞ்சள்- ஆரஞ்சு நிறமாக ஆகும்வரை, தீய்ப்பதாக இருந்தது. நான் அப்போது காட்டின் தரையில் அமர்ந்தேன், ஜ்வலிக்கும் கங்குகள் கருத்த ஆகாயத்திலிருந்து புரண்டு விழுவதைப் பார்த்திருந்தேன்.
துப்பாக்கி ரவை நம் மூளைக்குள் குடைந்து போவது போகும்போது எப்படி உணர்வோமோ அப்படித்தான் எரியும் மரங்களும் தெரிந்தன. மரங்களில் வலியை உணரும் திசுக்கள் இல்லை அதனால் நெருப்பு அந்த மாதிரி வலியாகக் கொணராது. அது தூலமானதல்ல. அது எல்லாவற்றின் இறுதியிலும் இருக்கும் நியாயத்தின் நெருப்பு. நிரந்தரமான, மாற்ற முடியாத தவறுகளையெல்லாம் எரிப்பது, உலகின் விளிம்பிலிருந்து பறந்து போவதைப் போன்றது. அது கடைசி ஒலியின் தாக்கும் எதிரொலி….
