காப்பீட்டின் பிறப்பிடம்: ஐரோப்பா

This entry is part 21 of 17 in the series பொது நலம்

ஒவ்வொரு பிரெஞ்சு குடிமகனும் தங்கள் சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை ‘Assurance Maladie’ என்ற தேசிய காப்பீட்டு நிதியில் செலுத்துகிறார்கள். மருத்துவரிடம் சென்றால் கட்டணம் கட்ட வேண்டும் — ஆனால் அந்தத் தொகையில் 70 சதவிகிதம் வரை அரசு திரும்பக் கொடுக்கும். மீதி 30 சதவிகிதத்தை ‘Mutuelle’ என்ற கூடுதல் தனியார் காப்பீடு ஏற்கும். வருமானம் குறைவானவர்களுக்கு இந்த 30 சதவிகிதத்தையும் அரசே ஏற்கும்.