முள் முனை

நெப்போலியனின் சரிதம் எழுதுவதற்கு இவர் எடுத்த முயற்சிகள், ஆவணக்காப்பகங்களில் செலவிட்ட நேரங்கள் நல்ல பலனைக் கொடுத்தன. McClure இதழ் விற்பனை ஏறியது. இவருடைய அடுத்த தொடர் லிங்கனைப் பற்றியது. நான்கு வருடங்கள் ஆராய்ந்து 20 பகுதிகளாக இவர் வெளியிட்ட அந்தத் தொடர் அமோக வரவேற்பைப் பெற்றது. போட்டிப் பத்திரிகையாளர்களின் காதில் புகை வந்தது; ‘பெண் எழுதும் வரலாறாம்’ என்ற கேலி வேறு. ஆனால், இவருக்குத் தடைகள் என்பது செயலூக்கிகள் என்பது, பாவம், அவர்களுக்குத் தெரியவில்லை. இவர் தலைநகரின் பெருந்தலைகளைச் சார்ந்து லிங்கன் சரிதத்தை எழுதவில்லை. லிங்கனின் பிறப்பிடமான கென்டக்கிக்குச் சென்றார். அவரது வாழ்க்கைக் குறிப்புகளை ஊராரிடம் கேட்டறிந்தார்;ஆவணக் காப்பகங்களுக்குச் சென்றார்.