சிலாம்புகளும் சில்லுகளும் – பெண் வரலாறு, குழு சுயசரிதைகள் பற்றி

அது, “எச்.டியின் படைப்பு வேலையைச் சுற்றியே அமைக்கப்பட்டிருந்த ஓர் அன்பான குடும்பம்,” என்று (உ)வேட் எழுதுகிறார். எச்.டி எழுத ஆரம்பிக்கும்போது, ப்ரெய்ஹர் எப்படித் தன்னை அந்த படிப்பறையின் வாயிலிலிருந்து தூக்கி எடுத்துப் போய் விடுவார் என்று பெர்டிடா நினைவு கூர்கிறார்; தன் அம்மா வேலை செய்யும்போது அவரைத் தொல்லை செய்யக் கூடாதென்று மிகச் சிறு வயதிலிருந்தே அந்தப் பெண்ணுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது. (சமகாலப் பெண் எழுத்தாளர்களில் எத்தனை பேருக்கு அப்படி ஒரு சுதந்திரம் அனுபவிக்கக் கிட்டி இருக்கும்?)