பொதுமங்களும் அரசாங்கமும்

சுற்றுச் சூழல் பேரழிவுகளின் காரணமாக சர்வாதிகார அரசுகள் தங்கள் மக்களுக்கு இயற்கை வளங்களின் கடைசி துண்டங்களைப் போராடிப் பெற்றுத் தர வேண்டிய அவசியம் உருவாகி ஒரு வித சூழல் பாசிசத்துக்குக் (ecofacism) கூட வழி நடத்தப்படலாம்; உண்மையில் சமனற்ற கொரோனா தடுப்பூசி விநியோகம் இதை முன் கூட்டியே உலகுக்கு உணர்த்தி விட்டது….எனினும் இதே காரணங்களுக்காகத்தான் அரசியல் மற்றும் கொள்கைகள் சார்ந்த போராட்டம் நிகழ்த்தும் ஒரு முக்கிய செயற்களமாக அரசு நிலைத்திருக்கிறது. எனவே அரசு ஒரு மிகையான அமைப்பு அல்லது இயல்பாகவே அது ஒரு மக்கள் விரோத அமைப்பு என்று காட்டுவது விவேகமற்ற நடத்தை என்று உணர்ந்து பொதும உந்தம் (momentum) செயல்பாட்டாளர்கள் அரசு எதிர்ப்பைக் கைவிட வேண்டும்.