இணையை இழந்த பெண் கிரவுஞ்சப் பறவையின் ஓலம் எழுப்பிய சோகம், சுலோகமாய்ப் பரிணமித்ததை ஆதி கவியைப் பற்றிய புனைவு சொல்கிறது. துயரம் வழிந்து விடாமல் கலை உருவம் பெறுகிற போது, துயரமும் காப்பாற்றப் படுகிறது; கவிதையும் காப்பாற்றப்படுகிறது என்று தோன்றுகிறது. பிரக்ஞை பூர்வமாக இல்லாத, இயல்பான சொல் கவனம் “கவிதையில் உறைந்திருக்கும் சிந்தாத கண்ணீர்”
Tag: சொந்தம்
ஊர் வேண்டேன்…
வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் ’எத்தனை கேள்வி எப்படிச் சொல்வேன், பதில் எப்படிச் சொல்வேன்’ என்று ஒரு பாட்டு வரும். பி சுசீலா பாடியது. ’நீ எந்த ஊரு, என்ன பேரு, எந்த தேசம், எங்கிருந்து இங்க வந்தே?’ என்று அதில் ஒரு வரி வரும். அப்போதே நான் நினைப்பேன், இப்படி ஒரு கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியுமா என்று. பலருக்கு ஓர் ஊர் இருக்கும். அதில் ஓர் ஆறு ஓடும். அந்த ஊர் மண் அவர்களை நெகிழ்த்தும். தொடர்ந்து அவர்களை ஈர்த்துத் தன்னுடன் தக்க வைத்துக்கொள்ள அந்த ஊரில் மனிதர்களும் விஷயங்களும் இருக்கும். ஆனால் என்னைப் போன்ற நாடோடிகளுக்கு ஏது ஊர்?
