ஆனால் நியாயமாகப் பார்த்தால், கேலிக்கு உள்ளாக்கும் சம்பவங்களை நோக்கினால் அவற்றிலிருந்து ஹிட்ச்காக் தன்னையும் விட்டு வைக்கவில்லை. ஹிட்ச்காக்கின் கோமாளித்தனம் பற்றி விளக்கம் தேடுவதானால், அது உலகம் அவரைக் கேலி செய்வதற்கு எதிரான ஒரு தற்காப்பு உத்தி என்று சொல்லலாம் என்கிறார் பான்வில். அவருக்குத் தன் பெரும் இடுப்பின் அளவு, உருண்டைத் தலை, மூன்று மடிப்புடன் தொங்கும் தாடை ஆகியன குறித்துச் சுயக் கூச்சம் நிறைய இருந்தது.
