புதிய தீவுகளும் பெயரிடலும் படுகொலைகளும்

This entry is part 10 of 10 in the series கொலம்பஸ்

கொலம்பஸ் புறப்பட்டவுடன், அவரது அறிவுரைகள் அனைத்தும் மறக்கப்பட்டன. கொலம்பஸின் ஒழுங்கு நிறைந்த அன்றாடக் கடமைகளிலிருந்து விலகி, கோட்டையில் இருந்த ஆண்கள்  பூர்வகுடி மக்களை மோசமாகவும் கடுமையாகவும் நடத்தினர். பூர்வகுடிப் பெண்களை பலவந்தமாக அபகரித்தல், தங்கத்திற்காக அச்சுறுத்துதல் ஆகியவையும் நடந்தன. ஸ்பானியர்களுக்கு இடையேயும்  பிரிவினைகள் ஏற்பட்டு, சிலர் காட்டுக்குள் தனியாகச் சென்று வாழத் தொடங்கினர். ஒரு குழு தங்கச் சுரங்கங்களைத் தேடி தலைவர்களிடம் இருந்து பிரிந்து சென்றது.