அசைவத்தை ஏன் கைவிடல் வேண்டும்?

This entry is part 16 of 23 in the series புவிச் சூடேற்றம்

நம்பிக்கையூட்டும் பூச்சுற்றல் அல்ல இது. இவர் சொல்லும் புள்ளி விவரங்கள் மற்றும் தீர்வுகள், இரண்டையும் இந்தப் பகுதியில் பார்ப்போம். என் அனுபவத்தில், முதன்முறையாக, ஒரு ஆவணப்படத்தைப் பல முறை பார்த்ததோடு, உட்கார்ந்து குறிப்புகளும் எடுத்துக் கொண்டேன். இந்தக் கட்டுரைக்காக அதைச் செய்தேன் – ஆவணப்பட இயக்குனராக அல்ல!

பருவகாலப் பரவலியலும் தொழில்நுட்பவியலும்

லட்சகணக்கான ‘ஸ்டொமாடா’ (க்ரேக்க மொழியில் ‘ஸ்டோமா’என்றால் ‘வாய்’) என கூறப்படும் இலைத்துளைகள் மூலம் மரங்கள் கூட, மாறும் சுற்றுசூழலின் விளைவுகளைப்பற்றி பல உண்மைகளைக் கூறுகின்றன. நீர் ஆவி, கரியமில வாயு, மேலும் பிராணவாயு ஆகிய எல்லாமே இந்தத் துளைகள் வழியே இலைகளுக்குள்ளும் வெளியேயும் செல்கின்றன, அதன் மூலம் பிழைத்திருப்பதை ஒரு சவாலாக ஆக்குகின்றன….ஆனால் ஆன்ட்ரூவும் ட்ரெவரும், …மற்றொரு கட்டுரையில், கரியமிலவாயு அதிகரித்துள்ள போது, ஹார்வர்ட் காட்டின் மரங்கள், சிகப்பு ஓக் உள்பட, கூடுதலான செயல் திறனுயுடன் செயல்படுகின்றன என்பதைப் பதிவு செய்திருக்கிறார்கள். வேண்டிய கரியமிலவாயுவை உட்கொள்ள தங்களது இலைத்துளைகளை அவ்வளவு விரிவாகவோ அல்லது அவ்வளவு அடிக்கடியோ அவை திறப்பதில்லை. அப்படியென்றால் மரங்களால் குறைந்த அளவு நீர் உபயோகித்து வேண்டிய அளவு அல்லது தேவைக்கு மேலான அளவு உணவு தயாரிக்கமுடிகிறது என்றாகிறது.

சாட்சி மரம்: ஓர் ‘ஓக்’ மரம் தட்பவெப்பநிலை மாற்றத்தைப் பற்றி என்ன தெரிவிக்கிறது?

மரத்தவளைகளின் முதல் கரகரப்பொலி, நிலத்திலிருந்த பனி உருகும் தருணத்தில் மண்ணிலிருந்து எழும் தாதுப்பொருட்களின் வாசனை. முதல் இலைகள் துளிர் விடும் காட்சி, குட்டைகளில் நீர் வடிவதும் மறுபடியும் நிரம்புவதும், ஓடைகளின் பாய்வு மற்றும் காட்டுப்பூக்களின் முதல் மலர்தல். இலையுதிர் காலத்தில்  நிறம் மாறும் இலைகள், கருவாலிக்கொட்டை கீழே விழும் போது கேட்கும் ‘மொத்’ என்ற சத்தம், பூக்கள் போலத் தோன்றும் உறைபனி மற்றும் குட்டைகளில் மிதக்கும் பனிக்கட்டிகள், பூர்ச்ச மரப்பட்டையின் அலாதியான கோலக்காய் போன்ற ருசி. இதோ இந்த நிலம்,சேற்றிலிருந்து அங்குள்ள கருப்பு ஈக்கள் வரை விவரச் செழுமையோடும், உன்னிப்பாகவும் கவனிக்கப்பட்டிருக்கிறது.
ஜான், காட்டினில் விடாமல் மறுபடி மறுபடி நடந்து திரிந்து பருவகாலங்களால் ஆன ஆண்டுகளைப் பற்றி விரிவான நாட்குறிப்பைச் சேகரித்து, எண். 2.5 பென்ஸிலால் தன்னுடைய சிறு கையெழுத்தில் நம் கிரகத்திற்கே தாக்கமுள்ள உள்ளூர் நிகழ்வுகளை பதிவு செய்திருக்கிறார். பல பத்தாண்டு காலமாக அவர் சேகரித்த அவதானிப்புகளில் தெளிவாகத் தெரிகிறது – சராசரியாக,  வசந்த காலம் சீக்கிரமாக வருகிறது, இலையுதிர் காலம் தாமதமாக வருகிறது. மற்றும் பனிக்காலம் இரண்டு பக்கத்திலிருந்தும் குறுக்கப்பட்டிருக்கிறது.