பனிப்பாறை உருகல்கள்: உலகம் வெள்ளத்தில் மூழ்குமா?

This entry is part 2 of 23 in the series புவிச் சூடேற்றம்

ஆர்க்டிக் பகுதிகளில் ஜூன் மாதத்தில் கடல், பனிப்பாறைகளால் மூடப்பட்டிருக்கும். செப்டம்பர் மாதம்தான் இங்கு அதிகமாகப் பனி உருகும். மீண்டும் அக்டோபர் கடைசியிலிருந்து உறையத் தொடங்கும். 1967 முதல் 2018 வரை, ஜூன் மாதப் பனியுறைப் பகுதி குறைந்துகொண்டே வந்துள்ளது. 1967–ல் இருந்த உறைந்த பகுதியிலிருந்து, 2018–ல் நாம் இழந்த பனியுறைப் பகுதி 2.5 மில்லியன் சதுர கி.மீ. இது சாதாரண இழப்பன்று. இது இந்தியாவின் நிலப்பரப்பில் 76%-திற்குச் சம்மானது!இந்த இழப்பைப்பற்றி எவரும் கவலைப்படுவதில்லை. ஆனால் ஏன் கவலைப்படுவதில்லை?