ஈரநிலம்

This entry is part 3 of 3 in the series கலிங்கம்

அதற்குள் இரும்பு கழி கோபுர சிப்பியை உடைத்திருந்தது. அதன் உள்ளில் இருந்து நண்டு போன்ற ஏதோ ஒரு ஜீவராசி சூரியனில் பள பளக்கும் மஞ்சள் நிறக் கல் ஒன்றை அதன் துடிக்கும் கால்களால் நகர்த்திக் கொண்டிருந்தது. கல்லை, உடைந்த ஓட்டில் இருந்து, எடுத்து ஆள்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையே பிடித்து, சூரியனை நோக்கி காண்பித்து,  ‘கலர் பாத்தீங்களா? புஷ்பராகக் கல். அதிர்ஷ்ட கல். மோதரம் செஞ்சு விரல்ல மாட்டுனீங்கன்னா மனசுக்கு ரொம்ப அமைதி கிடைக்கும். அவ்வளவு சக்தி’ என்று நிமிடத்தில் ஜோதிடராக உரு மாறினான் இளைஞன்.