அல்லாமா இக்பால்

This entry is part 2 of 12 in the series கவிதை காண்பது

இக்பாலின் ‘இறைவனுக்கு ஒரு கேள்வி’ (ஷிக்வா, புகார்) கவிதை வெளியானபோது அதில் நாத்திகம் ஒலித்தததைக் கண்டு மார்க்க அறிஞர்கள் குழம்பினர். இக்பாலுக்கு இறைவனை நோக்கிக் கேள்வியெழுப்பும் தைரியத்தைக் கொடுத்து எது? எதனால் இக்பால் இப்படி எழுதினார்? என ஐயத்துடன் ‘ஷிக்வா’வை அணுகினர். இக்பாலை இறை எதிர்ப்பாளராகவும் பேசத் தயங்கவில்லை. அதன் பின்னர் ‘கேள்விக்கு பதில்’ (ஜவாப்-ஏ-ஷிக்வா, புகாருக்கு விளக்கம்) கவிதையில் முன்னம் தான் இறைவனை நோக்கிக் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் இறைவன் பதில் அளிக்கும் வகையில் எழுதினார். அந்தக் கவிதைக்குப் பிறகு, இக்பாலின் ஷிக்வா, ஜவாப்-ஏ-ஷிக்வா இரண்டும் இஸ்லாமிய இலக்கியத்தில் சிறந்த படைப்புகளுள் ஒன்றாகப் பார்க்கப்பட்டது