மொபைல் தொடர்பாடல் வரலாறு – பகுதி 1 (0G & 1G)

ரேடியோ தொடர்பாடலில் பெருஞ்சாதனைகள் புரிந்த மார்க்கோனி முறையான பொறியியல் அல்லது இயற்பியல் பட்டம் பெறாதவர். அறிவியலர் என்பதைவிட அரைகுறைப் (tinkering) பொறியாளர் என்றால் பொருந்தும். நோபல் பரிசு ஏற்புரையில் தன் கண்டுபிடிப்பு எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றியெல்லாம் தனக்கு எதுவும் தெரியாது என்று மனம் திறந்து பேசினார். நோபல் பரிசு பெற்றிருந்தாலும் அவரை ‘ரேடியோவின் தந்தை’ எனக் கூறிவிட முடியாது.

மொபைல் தொடர்பாடல் வரலாறு-2G

2G இலக்க முறை செல்லுலார் தர நிலைகளைப் பொருத்தவரை, ஒவ்வொரு பெரிய பொருளாதாரமும் தனித்தனி தர நிலைகளை உருவாக்கிக் கொண்டன. உலகின் பெரும்பாலான மொபைல் செல்லுலார் இலக்கமுறை 2G அமைப்புகள் கீழ்க்கண்ட தரநிலைகளில் ஒன்றைப் பயன்படுத்துகின்றன:
ஐரோப்பாவின் GSM 900, GSM1800; TDMA தொழில்நுட்பம்
வட அமெரிக்காவின் IS-95A CDMA சிஸ்டம் ; CDMA தொழில் நுட்பம்
வட அமெரிக்காவின் IS-136(D-AMPS) சிஸ்டம் ;TDMA தொழில் நுட்பம்
ஜப்பானின் PDC (Personal Digital Cellular) சிஸ்டம்

மொபைல்  தொடர்பாடல் வரலாறு- பகுதி 3- 3G

யூரோப்பிய நாடுகளில் 3G உரிமங்களுக்கு அலைக்கற்றையை ஏல முறையில் விற்றதுவே தொலைத்தொடர்பு தொழிலையே பாதித்த முக்கிய விபரீத சம்பவங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது. 2000களின் ஆரம்பத்தில் யூரோப் முழுதும் 3G அலைக்கற்றை ஏலமுறை விற்பனை ஆரம்பிக்கப் பட்டது. அலைக்கற்றை விலை இயக்குனர்களால் (operators) தாங்க முடியாத அளவில் இருக்கும் என்று கருதப் பட்டதால் இதற்கு முன்பே இதே போன்ற 3G அலைக்கற்றை ஏல விற்பனை அமெரிக்காவில் கைவிடப் பட்டிருந்தது.