இன்க்ளூசிவான அன்பு, கருணை மூலமா உருவாகிற ஒழுங்குக்கு ஒற்றைப்படைத் தன்மை வந்து சேராதா? அது அதிகாரமா ஆகாதுன்னு என்ன நிச்சயம். அப்புறம் இங்க ஒரு முரண் இருக்கு. அதாவது நீங்க சொல்ற அந்த அன்போட விளைநிலம், அல்லது அதை ஒரு தனி ஆன்மா கண்டுகொண்ட முதல் இடம்ங்கிறது குடும்பம் தான். குடும்பம் அப்படின்னாவே அது எக்ஸ்க்ளுசிவ் அமைப்பு தான். அப்பா அம்மா பிள்ளைகள்ங்கிற பிரத்தியேக தன்மை. அங்க தான் அன்பு முதல்ல அடையாளம் காணப்படுகிற இடம்,
Author: விஜயகுமார் சம்மங்கரை
இருள் வெளிச்சம்
அதிகாரத்தின் நெடிய கைகளில் இருந்து தப்பிக்க அது இயங்கும் நேரத்தில் நாம் இயங்காமல் இருக்க வேண்டும் என்பது என் அம்மாவின் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும். வறியவர்களின் கைகள் இருளில் தான் ஓங்கியிருக்கும் வாய்ப்பிருக்கிறது. அது அதிகாரத்தை கூட நடுங்க வைக்கும். அம்மா செய்த ஒரு கொலையை நான் கண்டிருக்கிறேன். அது இருளில் ஆரம்பித்து இருளில் முடிந்ததால் பகலின் நியாய சட்டங்கள் அதற்கு பொருந்தாது என்ற வியாக்யானம்
மஹான் சக்கரக்கத்தி
தாத்தா அவனுக்கு என்ன செய்தாரோ! அவனும் தாத்தாவின் பழம்பெரும் கதையாடல் செய்யத்தான் வந்திருக்கிறான்போல. போய்விட்ட தாத்தாவை அப்படியே விட்டுவிட முடியவில்லை. சடுதியில் செல்வோரை அனுமதிக்க கூடாது. அவர்களை நிறுத்தி வைத்து, கடைசி கணக்கையும் சீரமைத்துவிட்டுதான் அனுப்ப வேண்டும். இல்லை என்றால் இப்படித்தான்.
