எதிர் (பாரா) வினை

ஒவ்வொரு மூணு மாசத்துக்கும் இப்டி எதையாச்சும் கொடுத்திட்டேதான் சார் இருப்பாங்க…விதி முறைப்படி நாம அவுங்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதைத்தானே செய்ய முடியும்…? அவுங்க அப்ளிகேஷனை நிறுத்தி வச்சாத்தானே தப்பு? அதைத்தான் ஃபார்வேர்டு பண்ணிடுறமே…சென்னைல இருக்கிற துறைத் தலைமைதானே இதையெல்லாம் பரிசீலிக்கணும்? லோக்கல்லயே இன்னும் ரெண்டு ஆபீஸ் தாண்டணுமே…!

பாவப்பட்டவன்

‘என் சர்வீசிலே நான் எவ்வளவோ பார்த்துட்டேன் சார்…திருச்சில நான் இருந்தபோது இப்படிச் சொல்லிட்டிருந்த ஒரு மானேஜரை, அவர் வயலூருக்கு டூ வீலர்லே போகறச்சே இடை மறிச்சு அடி பின்னி எடுத்துட்டாங்க சார்…அந்த நிகழ்வுக்குப் பிறகு அவர் ஆபீசுக்கே வரலை. அப்டியே லீவைப் போட்டுட்டுப் போனவர்தான். மெட்ராஸ் போயிட்டார் ஒரேயடியா…! இவுங்கல்லாம் ரொம்ப வருஷமா தொடர்ந்து நம்ம ப்ராஜக்ட் ஒர்க் பார்த்திட்டிருக்கிறவங்க சார்…ஆளுகளைக் கூட மாத்த முடியாது…யாரையும் எதுத்துக்கவும் முடியாது. அவுங்களால எந்தப் பிரச்னையும் வராது. ஏன்னா எந்தச் சிக்கல்னாலும் அவுங்களே சமாளிச்சிக்குவாங்க…நாளைக்கு ஆடிட்ல பிரச்னை வந்தாலும் கையைக் காண்பிச்சு விட்டாப் போதும்..

ரயிலில் ஏறிய ரங்கன்

அம்மா சொல்வது மிகச் சரி என்றுதான் என் மனதுக்கு சொன்னது. அந்த ரயில்ல வர்ற அத்தன பெட்டிக்காரவுகளும் எனக்கு ஃப்ரென்ட்ஸ்…..அவுகளப் பிடிச்சி என்னைக்காச்சும் ஒரு வாட்ச்மேன் வேலையாச்சும் வாங்கிப்புட மாட்டேன்? அட…கூட்டிப் பெருக்கி, தண்ணி எடுத்து வைக்கிற வேலையாச்சும் கிடைக்காமயா போய்டும்…? அஞ்சாங் க்ளாஸ்வரைக்கும் படிச்சவன்தான நான்…பெறவுதான போதுண்டான்னுட்டாக வீட்ல…எட்டு க்ளாஸ் படிக்கணுமாமுல்ல…பியூனாகுறதுக்கு….வாட்ச்மேன் ஆகி அப்புறம் உயருமாமுல்ல…அதுல பியூன் ஆகலாம்னு ஒருத்தர் சொன்னாரு….அந்த அய்யா கூட கலெக்டர் ஆபீஸ்ல தாசில்தாரா இருக்காருன்னு சொன்னாங்க

நீக்(ங்)குதல்

தியாகராஜன் அவர் கைபேசியை அணைத்து வைத்திருந்தார். யாருடனும் பேசப் பிடிக்கவில்லை அவருக்கு. என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது? என்றிருந்தது. வேண்டாத அழைப்புகள் நிறைய வருகின்றன என்று எரிச்சல்பட்டு  அணைத்து வைக்க ஆரம்பித்தவர் இப்பொழுது வேணும் அழைப்புகளும் தேவையில்லை என்று தோன்ற அது அணைந்தே கிடந்தது. உலகமே அதை அணைத்துக்கொண்டு “நீக்(ங்)குதல்”

ஒரு கோப்பின் சுயசரிதை

ஒவ்வொரு அலுவலகங்களும் ஒவ்வொரு விதமான ரகசியத்தைத் தன்னகத்தே கொண்டு தடையின்றி இயங்கி வருகின்றன. நிர்வாகம் என்பது ரகசியங்களின் கிடங்கு. அங்கே கிளரக் கிளர ஏதாவது வந்து கொண்டேயிருக்கும். பிசுக்கு நாற்றம் அடித்துக்கொண்டேதான் இருக்கும். அந்த நாற்றத்தை நறுமணம் என்று கருதித்தான் அங்கே இயங்கியாக வேண்டும். அங்கு இயங்குபவர்கள் அனைவரும் அறிந்ததுதான், நுகர்ந்ததுதான். ஆனால் சொல்லி வைத்தாற்போல் அது நறுமணம்தான் அத்தனை பேருக்கும்.