இரண்டு போலீஸ்காரர்கள் தம் இடுப்பிலிருந்த துப்பாக்கிகளை வெளியே எடுத்து காளைகளின் அருகே மெதுவாகச் சென்றனர். பாதுகாப்பான தூரத்தில் தெருவில் முட்டியிட்டுக் குனிந்து உட்கார்ந்தனர். பொதுமக்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டு காத்திருந்தனர். கூட்டத்தில் யாரோ கத்தினார்கள்: ஏய், அது மஹாதேவக் கடவுளின் காளை – அவற்றைக் கொல்வதில் என்ன பலன்? இன்னொருவன் பதில் சொன்னான்: ஆனால் அவை கம்யூனிஸ்ட் காளைகள் – அவற்றைக் கொல்வது பாவமில்லை!