சக்தி சட்டோபாத்யாய் கவிதைகள்

தன் முப்பதாண்டு படைப்பு வாழ்க்கையில் இவர் எழுதிக் குவித்த கவிதைகள் ஏராளம். கணக்கு வழக்கில்லை. 45 தொகுப்புகள், சுமார் 2500 கவிதைகள் என்று ஒரு கணிப்பு.(poemhunter.com). 10000 கவிதைகளுக்கு குறையாமல் தேறும் என்று இன்னொரு கணிப்பு….இவரோடு 38 வருடங்களாகப் பழகிய சமீர் சென்குப்தா( Samir Sengupta) தன் நினைவோடையில், சக்தி சட்டோபாத்யாய் தான் எழுதியவை எவ்வளவு, என்னென்ன என்று கூட கவனிக்காதவரென்றும், இவரைப் போல் தன் படைப்புகளின் மேல் பற்றற்றவராக யாரும் இருக்க முடியாதென்றும் பதிவு செய்கிறார்.