நான்கு சுவர்களுக்குள் விரியும் அகாலம்

கல்கத்தாவின் மக்கட் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தெருக்களில் வாழ்ந்தனர். இவர்களைவிட ஓரளவு மேம்பட்ட நிலையிலிருந்த நடுத்தர மக்கள் வங்காளத்தின் மரபார்ந்த குடும்ப அமைப்பைப் பற்றிக்கொண்டு கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்தனர். ஒரே வீட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஒன்றாக வாழ்வது மிகச் சாதாரணமாக இருந்த காலகட்டம். ஆஷாபூர்ணா தேவியின் கதைகள் பெரும்பாலும் இம்மத்திய வர்க்கத்துக் குடும்பங்களிலிருந்து முளைப்பவை.