ஒரு வாடிய கிளை

ஏதோ கெட்டது நடக்கப் போகிறது என்ற இனம்புரியாத அச்சம் என் நெஞ்சில் பரவியது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், ஏதோ நான் எதிர்பார்த்தபடிதான் அங்கே எல்லாம் நடந்துகொண்டிருப்பதைப் போல, அவர்களோடு இயல்பாக அரட்டையடிக்கத் தொடங்கினேன். மாஸ்கோ வழியாக எப்போதாவது வண்டியை ஓட்டிச் சென்றிருக்கிறார்களா, அவர்களுக்குக் குடும்பம் இருக்கிறதா என்றெல்லாம் கேட்டேன். என் எட்டு வயது மகனைப் பற்றி அவர்களிடம் கூறினேன். (அவன் அப்போது சிறுவர்களுக்கான சானடோரியத்தில் இருந்தான்.)