ரிச்சர்ட் நிக்சன் பிரைஷுட்ஸ் ராக்

-லிமுஸீன் டிராகன் மாளிகையில் நின்றது. ரிச்சர்ட் நிக்சன் வெளியேறினார். வீரக் குடிகளின் தொண்டர்ப் படைக் காவலர்கள் உருவமைதியுடன் நிமிர்ந்து நின்றார்கள். உள்ளே முற்றத்தின் சுவர் மீதிருந்த நான்கு உயரமான சுவரொட்டிகள் ரிச்சர்ட் நிக்ஸனின் கண்ணைப் பறித்தன.
– அது மார்க்ஸ், சுட்டிக்காட்டிக் கொண்டே அவர் கூறினார்.
– மார்க்ஸ், மார்ஷல் ஏ ஒப்பித்தார்.
-அது எங்கல்ஸ்
– எங்கல்ஸ்
– அது லெனின், அப்புறம் அது ஸ்டாலின்.
-துல்லியமாகச் சொன்னீர்கள், மார்ஷல் ஏ பதிலளித்தார்.
ரிச்சர்ட் நிக்சன் இரண்டாவது சுவரொட்டிக்குத் திரும்பிச் சென்று, கையுறை அணிந்த கையால் சுட்டிக் காட்டினார்.
– இது எங்கல்ஸா ?
– எங்கல்ஸ், மார்ஷல் ஏ கூறினார், கண்களில் கவலையும், மிகுதியான பணிவும் கலந்த பார்வையுடன்.
-அமெரிக்காவில் எங்கல்ஸின் படங்களை அதிகமாகப் பார்க்க முடியாது, ரிச்சர்ட் நிக்சன் விளக்கினார்..