திகில் படங்களைக் கூட பார்க்கத் திராணி இல்லாத பரிமளாவால் பேயைப் பார்ப்பது, அதனால் துன்புறுத்தப்பட்டு மாண்டு போவது என்றெல்லாம் யோசிக்கவே பேரச்சமாக இருந்தது. மரணம் நிகழும் நாளென ஓலையில் குறிப்பிட்டிருந்த திதியான பஞ்சமி என்ற பெயரே அவளுக்கு ஏதோ அமானுஷ்யமான வார்த்தையாகத் தோன்றியது.
Author: பிரம்ம ராக்ஷஸன்
பைசாசம்
சதா சர்வகாலமும் காதில் குறி சொல்லிக்கொண்டே இருக்குமொரு “கர்ண யக்ஷினி” தம்மிடம் இருந்ததாகவும், அதன் இடையறாத குரல்களைக் கேட்டு, தம்முடைய இடப்பக்க செவி, கேட்கும் திறனற்றுப் போனதாகவும், பிறகு தமது குருநாதரின் உதவியுடன் பெரும் ப்ரயத்தனப் பட்டு அந்த யக்ஷிணியை தம்மிடமிருந்து விடுவித்துக் கொண்டதாகவும் ஒருமுறை சங்கரனிடம் கூறினார்.
