பூனைகளின் குருதியாறு

துண்டிக்கப்பட்ட சிறுவனின் தலையைத் தேடி ஒரு குழு இரு படகுகள் மூலம் நேப்பியர் பாலத்துக்கு அருகிலான கூவத்தின் சாக்கடையில் தேடிக் கொண்டிருந்தபோது, ஜீப்பில்  செம்மஞ்சள் பூனையை வைத்துக் கொண்டு, இன்ஸ்பெக்டர் பூனை ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்று விசாரித்துக் கொண்டிருந்தது. எப்போதும் சிரித்துக் கொண்டே இருந்த அந்தச் செம்மஞ்சள் பூனை எந்த விசாரணைக்கும் மறுப்பு தெரிவிக்காமல் அழைத்த இடத்துக்கெல்லாம் சென்று முழு ஒத்துழைப்பு கொடுத்தது. “என்னய்யா… உன் ஒருத்தனால, எத்தனை பேருக்குக் கஷ்டம் பாரு. உண்மையைச் சொல்லிடுய்யா.’

பார்வையின் கட்டுமானம்

அம்மா சொன்னாள்: “என்னைப் பெண் பார்க்க டீச்சரையும் அப்பா அழைச்சிட்டு வந்திருந்தாங்க. கூட ஒர்க் பண்ணுறவங்க தானேன்னு நானும் சாதாரணமா எடுத்துக்கிட்டேன். டீச்சர் என்னைப் பார்த்துட்டு, அப்பாகிட்ட போய், பொண்ணு நல்லா இல்லன்னு சொன்னீங்க. ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னாங்க. நான் நல்லா இருக்கேன்னு சொன்னா டீச்சர் வருத்தப்படுவாங்களோன்னு அப்பா அப்படிச் சொல்லியிருப்பாங்க போல.’’ என்றார். எனக்கு அம்மா சொன்னதைவிட பெண் பார்க்க டீச்சரையே அப்பா அழைத்து போனது ஆச்சரியமாக இருந்தது. அப்போது டீச்சரின் மனம் பறவையைப்போல துடித்துக் கொண்டிருந்திருக்குமோ என்றும் வருத்தமாக இருந்தது.

கந்திகோட்டா – பேரமைதியின் பள்ளத்தாக்கு

ஏறும் போது
கனத்த தோற்றத்தில்
இறுக்கமாகவும்
அழுத்தமாகவும் இருக்கும் மலை
இறங்கும்போது
குழந்தையாகி விடுகிறது
அதையும்
தூக்கிக் கொண்டு போகச் சொல்லி அடம்பிடிக்கிறது

எட்டு மாடிகள் கொண்ட பொம்மைக் கதை

ஒரு பொம்மையாக அந்தாரா உருமாறி வருவதை அந்தத் துணிக்கடையில் பணிபுரிந்த அத்தனை பேரும் உணரத் தொடங்கிய பிறகான நாளொன்றின் நண்பகலில், ஆறு மாதத்தயக்கத்திற்குப் பிறகு அவள் தனது காதலை வெளிப்படுத்தியபோது, மிஸ்டர் ஜீன் எனும் அந்தக் காட்சியாக்க ஆண் பொம்மை எப்போதும்போல் அசையாமல் காலில் முட்டுக் கொடுத்து,முகத்தைக் கைகளில் தாங்கி உட்கார்ந்திருந்தது..