மாணாக்கன்

“அவர்கள் யேசுவை முதன்மை மதகுருவின் முன்னிலையில் கேள்விகள் கேட்கத் துவங்கினர். அந்த சமயத்தில் முற்றத்தில் வேலைக்காரர்கள் குளிர் காய்வதற்காக நெருப்பு மூட்டினர். அவர்களுக்கு அருகில் நின்றிருந்த பீட்டரும் கைகளை நீட்டி குளிர் காய்ந்தார். அப்போது, அங்கிருந்த ஓர் பெண்மணி, பீட்டரைக் கண்டு “இவரும் யேசுவுடன் இருந்தார்” என்றார்.  அதாவது, பீட்டரையும் இழுத்து சென்று கேள்வி கேட்க வேண்டும் என்று அர்த்தத்தில் கூறினாள். 

வயோதிகம்

யுஸெல்கோவ் அறைக்குள் அங்கும் இங்கும் நடந்தான்; கொஞ்ச நேரம் சிந்தனை செய்துவிட்டு ஷாப்கினை அவனுடைய அலுவலகத்தில் சென்று சந்திப்பதென சலிப்பாக முடிவெடுத்துக் கொண்டான். உணவகத்தை விட்டு வெளியே வந்து கிர்பிட்சினி தெருவை நோக்கி இலக்கற்ற மெது நடையில் அவன் சென்ற போது நண்பகலாகியிருந்தது. ஷாப்கினை அவனுடைய அலுவலகத்தில் சந்தித்தான்; அவனை அடையாளம் கண்டுகொள்ளவே சிரமமாக இருந்தது. நல்ல உடலுடனும் துடுக்குத்தனமானவனாகவும் குடிபோதையேறிய முகத்துடனும் திறமை மிக்க ஒரு வழக்கறிஞனாக நடந்து திரிந்த ஷாப்கின் தற்போது அமைதியான, நரைத்த தலையுடன் அடங்கி ஒடுங்கிய ஒரு கிழவனாக மாறிப்போயிருந்தான்.

விரோதிகள்

“ இது ஒரு வேதனைமிக்க சூழ்நிலை! நமக்குப்பிடித்தமானவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து போய்விடுவார்கள் என்ற அபாயத்தில் இருக்கும்போது அவர்களை நாம் நேசிப்பதைப்போல நாம் அவர்களை ஒருபோதும் அதிகமாக நேசிப்பதே இல்லை.”
ஆற்றுக்குக் குறுக்காக வண்டி சென்று கொண்டிருந்தது. தெறித்த தண்ணீரால் தான் பயப்படுவதைப்போல அப்படியும் இப்படியுமாக நெளிந்தான் அபாஜின்.
“கொஞ்சம் பார்— என்னை விட்டுவிடேன்…” என்று பரிதாபமாகச் சொன்னார் கிரிலோவ்.