Site icon சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026

றெக்கை –  அத்தியாயம் 26

This entry is part 26 of 27 in the series றெக்கை

வாடகை வண்டி மூன்று மணி நேரம் தாமதமாக வந்தது.சாரட் ஓட்டி கையில் தொப்பியை எடுத்து வைத்துக்கொண்டு  வணக்கம் சொன்னான்.

உன் மாமியார்  வந்தாங்களா?லெவி அவனை அன்போடு விசாரித்தான், அவனுக்கு சாரட் வண்டியோட்டிகள், துப்புரவு பணியாளர்கள்,சர்ச் வாசலில் வெண்குரிசு டாலர் பதித்த முலாம் பூசிய செயின் விற்பனையாளர்கள் என்று சகலமானவர்களும் பழக்கம். எல்லோரையும் அவர்கள் ஒவ்வொருவருக்குமான செல்லப் பெயர் சொல்லி அழைத்து நலம் விசாரிக்க அவன் மறப்பதே இல்லை. இப்போது சாரட் ஓட்டியை குசலம் விசாரிக்கிறான்.

சிக்னோர், என் மாமியார் இன்னும் உசிரோடு இருக்காளே. கல்லறை திருநாள் சிறப்பு தரிசனம் எப்படி தர்றது?

சாரட்  வண்டியோட்டி கையில் பிடித்திருந்த தொப்பி சற்று உயரத்துக்கு வரும் நேரத்தில் தகதும் என்று நிருத்தமாடினான்.     

இதமான காலை வெய்யிலோடு நவம்பர் மாதம் மேட்ரிட் பெருநகரில் பிறந்திருந்தது. நானும் வரலாமா என்று விசாரித்தபடி முன்பனிக்காலம் காலக்கதவை சற்றே திறந்து உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது, பஷ்சீமலா சால்வை போர்த்தி நான் சாரட்டில் இருந்தேன். 

நிம்மி வந்துட்டேன்,’லெவி குரல். 

சத்தம் கூட்டிச் சொல்லியபடி ஓடி வந்து சாரட்டு வண்டியில் ஏறிக்கொண்டான் .வஞ்சனையில்லாமல்  வளர்த்திய  கூடுதல் சதை  அவன் அடி வயிற்றில் தொம் தொம் என்று கூவாமல் குதித்தது. 

லெவி ஒரு வினாடி பக்கவாட்டில் அசையும் வண்டியில்  நின்றபடி அலைபாய்ந்தான். அடுத்த வினாடி அவனது வலுவான கரங்கள் என் தொடைகளின் மேல் ஊன்றி அவற்றை நீவிக்கொண்டிருந்தன.  . அபாய பிரதேசத்தை  கடந்த அவை என் இடுப்பில் நிலைத்தன. கட்டையில் போவான் என்னை அவசரமாகத் தன் மடியில் இருத்தி என் உதடுகளை தனது கொண்டு ஈரமாக்கினான். 

ஆக, இறந்தவர்களுக்கு வணக்கம் சொல்லப் போகிறாயா?

நான் புன்சிரிப்போடு சாரட் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன்

எஇன்று  காலை நேரம் வெகுவாக அரட்டையிலே கழிந்தது. முத்தச்சன் ஒரு யோசனை வைத்தார் –இன்னக்கி லீவு தானே அல்பி எஜமான், கிட்டா எஜ்மான், ்்டாக்டர் எஜமானி, விசி எஜமானி. புதுசா கத்தீட்ரல், கடைத் தெரு, ஹோட்டல் இப்படி போய்வந்தால் என்ன?

ஷாப்பிங் இப்போ போனால் கிறிஸ்துமஸ், புது வருடம், அப்புறம் கார்னிவல் இப்படி பெரிய கை பணப் பரிவர்த்தனைகள் big ticket transactions நிகழ்த்த கையில் பசை இருக்காது வேண்டி வரும்போது கையில் காசு தட்டுப்பாடாகி விடும்,கையில் பசை இருக்காது liquidity

அல்பி கட்டிலில் அடுத்த உறக்கத்துக்கு தயாராகிக் கொண்டே சொன்னான். அருமையான அபிப்ராயம் என்று அபிநயம் பிடித்த முத்தச்சனுக்கு அது ஒண்ணும் அர்த்தமாகவில்லை.அவன் ஒரு பார்வைக்கு ஆலப்பா.ட்டு  வயசனாகத் தெரிந்தான்.

மிருகக் காட்சி சாலை என்றாள் முத்தச்சி.

அய்யோ  செத்தேன்,முத்தச்சன் தலைக்கு மேல் கைகூப்பிச்  சேவித்தார் 

கிழவர் இன்னிக்கு வயசு எழுபத்தாறு. இவர் அறுபது              வயசிலேதன் முதல் முறை யானையை பார்த்தாராம்.  ஆனை மனுஷர்களை சாப்பிடும்னு நினைச்சாராம். இன்னும் இந்த பயம் இருக்கு.

 முத்தச்சி கிழவரை இடுப்பில்  செல்லமாக குத்தினாள்.

 ஆகவே எஜமான்களே, எஜமானிகளே இன்னும் பத்தே நிமிடத்தில் ரெடி ஆகும்படி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.

கிழவி முழங்கினாள். எங்கே என்று விசாரித்தேன்.மிருகக் காட்சி சாலைதான். 

எனக்கும் கூண்டுக்குள் அடைத்த சிங்கம் புலி கரடியை அவை எழுப்பும் திவ்யமான கந்தத்துடன்  தரிசித்து வருவதில் ஈடுபா டு இல்லை.அல்பி நோயில் ஆரோக்கியம் பழுதாகிக் கிடக்கும் தருணத்தில் அவனுக்கு உதவியாக இருந்து பணிவிடை செய்வதே சாலச் சிறந்தது என்று சான்றோர் வகுத்தனர்.ஷாப்பிங் போகிறேன் என்று ஊர் மேயப் போவது பத்தினியருக்கு உகந்த செயலில்லை.  

நான் அல்பி உறங்கிக் கிடந்த கட்டிலை நோக்கிப் போனேன். லெவி வழிமரித்து என்னை தடுத்தாட்கொண்டான். நிம்மி போகலாம் வா.

எங்கே என்று கேட்டேன். போனதும் நீயே தெரிந்து கொள்வாய் என்றான்,  தலை அலங்காரம் புறப்பட்டதே என்று கிளம்பிவிட்டேன். சாரட்    உள்ளே பாதி இருட்டில் உட்கார்ந்திருக்கிறேன், லெவி சக பிரயாணி,

இறந்தவர்களுக்கு வணக்கம் சொல்லப் புறப்பட்டு விட்டேன், சாரட் உள்ளே ஒற்றை மெழுகுவர்த்தி இருளை அதிகமாக்கிக் கொண்டு எரிந்தது. அதன் சுடர் எந்த தொந்தரவும் தராமல் அணைய லெவி மெழுகுதிரி மேல் காற்றை ஊதினான், உய்ய்ய் என்று உதட்டில் சூடான  மெழுகு திரவம் ஒட்ட பின்வாங்கி இனிச் செய்ய வேண்டியது என்ன என்று என்னை உற்று நோக்கினான்.சாரட் முழுக்க இருள் அப்ப,அருகில் அமர்ந்து என் ஸ்தனங்களை கை குவித்து பற்றினான், பேசலானான்.

ஒவ்வொரு வருஷமும் நவம்பர் ஒண்ணாந்தேதி கல்லறைத் திருநாளாக கொண்டாடப் படும்.இங்கே ஸ்பெயின்லே மட்டுமில்லை ஐரோப்பா முழுக்க அப்படித்தான். All Saints Day தான் பொதுவான பெயர், எனில், மெக்சிகோ விழா எடுத்தலும் ப்ரஸீல் கொண்டாட்டங்களும் எஸ்பானிய கோலாகலங்களோடு ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை.

தலை கிறுகிறுத்து உட்கார்ந்திருந்தேன்,சாரட்டை நிறுத்தச்சொல்லி வண்டியோட்டிக்கு கூச்சலிட்டு இறங்கிப் போய்விடலாமா?

வண்டியை நிறுத்தினால் லெவிக்கு என்ன போச்சு? லெவி சொன்னதை அவன் வேறே சந்தர்ப்பத்தில் கூறியதற்கு மாறாக இருப்பதோடு அடுத்தடுத்து நிறுத்தினால் என்ன சொல்வான்?

ஏன் லெவி, லிஸ்பன்லே இருந்து திரும்ப வந்ததற்கு அப்புறம் அல்பியோட ஆரோக்கியம் வஷாலாயிட்டிருக்கே நீ கவனிக்க மாட்டியா?

கவனிக்காம என்ன?வஷால் என்னாக்க என்ன?

ஐயோ என்று அவனை இழுத்து என் மடியில் கிடத்திக் கொண்டேன், வஷால் என்னாக்க மோசம். இப்போ நாம் ரெண்டு பேரும் இருக்கப்பட்ட நிலமை,

சாரட் சாரதி பின்னால் இருக்கும் சிறு சாளரம் மெல்லத் திறந்தது, வண்டி ஓட்டியபடி அவன் அவசரமாகப் பேசினான் –

சிமத்தோரி இன்னும் முப்பது நிமிஷத்திலே போய்ச் சேர்ந்திடுவோம் சிக்னோர், சிக்னோரா, ஏதாவது சிறு ஆகாரம் வாங்கி வரணுமா?

நான் ’ நன்றி வேண்டாம்’ சொல்லியபடி இருட்டில் லெவியை தட்டிய இடம் தப்பாகப் போனது, வெகு சிரமப்பட்டு என் மடியை விடுவித்துக் கொண்டு அவன் காதில் சொன்னேன் – அருவஷால் (ரொம்ப மோசம்)

அருவஷால் யாரு?  அல்பியா? அல்பி என் நண்பன் மட்டுமில்லை.சக வர்த்தக உடைமையாளன். என் வேலைக்காரன். என் எஜமானன். என் சிநேகிதி, என் தொடுப்பு. என் அரசன். என் அடிமை. நான் அவனை தினம் சந்திக்க வராட்ட என்ன? அவன் என்னை தேடி வராமல் இருப்பதில்லை.

லெவி அடுக்க, எனக்கு அந்த உரையாடல் ரசாபேதமாக பட்டது, விடாமல் கேட்டேன் – அல்பி எப்படி உனக்கு தொடுப்பு ஆக முடியும்?

சரி விடு அதை. அவன் எனக்கு தொடுப்பு இல்லேன்னா நான் அவனுக்கு தொடுப்பு.

லெவி சொன்னது எனக்கு வியப்பளித்தது, எனில் அதிர்ச்சியளிக்கவில்லை.லிஸ்பன் போய் வந்த பிறகு அல்பி கிட்டத்தட்ட தினமும் லெவியை சந்திக்க அவன் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறான்.’

லெவி இன்னும் அதிகமாகச் சொல்லியபடி என்னை இறுக அணைத்துக் கொண்டான்.

நிம்மி, அல்பி உன் னோடு முழுவதாக ராத்திரிகளை அனுபவிக்கறது இல்லை தானே?ஒரு டாக்டராக உனக்கு தெரிஞ்சிருக்கணுமே, அவன் இப்போதெல்லாம், அதாவது நாங்க லிஸ்பன் போய் வந்த அப்புறம் கடுமையான erectile dysfunction பாதிச்சு அதனாலேயோ என்னமோ பெலஹீனமும் நோயாளி தோற்றமுமாக ஓய்ந்து கிடக்கறானே

சொல்லியபடிஅவன் சாரட்டில் இருந்து இறங்கினான். தற்செயலாக சம்பவித்தது போல்   என்  கொங்கைகளைப் பற்றி பிடித்து என்னை இறக்கிவிட்டான்,

சிமத்தோரி கலகலப்பாக காணப்பட்டது.கல்லறைகள் திறக்கப்பட்டு உள்ளே எலும்புகள் குவியலாக சிதறிக் கிடந்தன. எல்லா வயசிலும் உறவினர்கள் கல்லறை திறந்து பல விதத்திலும் அவற்றில் இருந்த உற்றாரை அடையாளம் கண்டு உவகையோடு சவப் பெட்டிகளில் இருந்து அவர்களை வெளியே எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

லெவி அவசரமாக முன்னால் நடந்து போனான். நான் அப்போதுதான் கல்லறை திறந்து கொண்டிருந்த ஒரு சவக் குடீரத்து உறவினர் கூட்டத்தோடு கலந்து நின்றேன்,

பத்து வயது மட்டும் காணும் ஒரு சிறுமி எனக்கு நற்காலை வணக்கம் சொன்னபடி கையில் எதையோ பிடித்து இருந்தாள்.எங்கள் கொள்ளுப் பாட்டியும் உங்களுக்கு வந்தனம் சொல்கிறார் – சிறுமி பூச்சிதறியதுபோல்  சிரித்தபடி கையில் பிடித்திருந்த எலும்பை என்னிடம் கொடுத்தாள்.

இதை எதிர்பார்க்காத நான் கைக்குட்டை கொண்டு மூக்கை அடைத்தபடி வேண்டாம் என்று அவசரமாக விலகினேன். சிறுமிக்கு பின்னால் இரண்டு நடுவயசுப் பெண்கள் ஸ்பானிஷ் மொழியில் என்னைக் கேட்டது புரிந்தது.  நான் ஸ்பெயின்காரி இல்லை இந்தியப் பெண் என்று அவளுக்கு பதில் சொன்னேன், அது இங்க்லீஷில் இருந்தது. அவர்களுக்குப் புரியவில்லை. மெக்சிகோ பெண்பிள்ளை என்று அவர்கள் தங்களுக்குள் என்னை அடையாளம் கண்ட ஓசை ஒலித்தது.

சிறுமியிடமிருந்து கொள்ளுத் தாத்தனை இழுத்துப் பிடுங்கினார்கள். எலும்பு தரையில் விழுந்தது. மெக்சிகோ பெண் என்று சொன்னதுமே கூடப் படுக்க வந்து நிக்கறதை பாரு-அவர்களில் ஒருத்தி சிகப்பு உள்ளாடை சற்றே தெரிய கையில் எடுத்திருந்த எலும்பை உள்ளே வைத்தபடி என்னை பார்த்து 

– கொள்ளுப் பாட்டா, இந்தியாக்காரியோ, மெக்சிகோ பொம்பளையோ, உனக்கு ஏன் வம்பு? எலும்பா இருந்துக்கிட்டு உள்ளே போனால் காணாமல் போயிடுவே. 

அலை அலையாக சிரிப்பு கல்லறைகள் ஊடே பரவ விரைவில் சிமதோரி முழுக்க நகைத்துக் கொண்டே வந்த காரியத்தைத் தொடர்ந்தது. லெவி பின்னால் இருந்து செவி மடலை இதழால் வருடினான் -போகலாம் எல்லாம் ரெடியா எடுத்து வைச்சாச்சு. வெல்கம் வெல்கம் welcome to my dear father’s final resting place waiting for the Judgement Day, honey.

லெவியின் பரம்பரை சொத்தான கரும்புத் தோட்டத்தில் வேலை செய்யும் அடிமைகளோ ஒப்பந்த தொழிலாளர்களோ மூன்று பேர் எல்லா முன்னேற்பாடுகளையும் செய்து வைத்து, லெவி புதுத் துணியை மிச்சமிருந்த எலும்புகள் மேல் போர்த்தக் காத்திருந்தார்கள்.

கல்லறையை பொறுத்தவரை எவ்வளவு காலம் புதையுண்டதற்கு அப்புறம் திறக்கப்படுகிறதோ அவ்வளவு குறைந்த அளவில் எலும்புத் துண்டுகள் உள்ளே காத்திருக்கும் என்று புரிந்தது. பத்து அல்லது அதற்கு மேல் சமாதியான வருஷம் இருந்தால் சவப்பெட்டியும் சவப்பெட்டி வாசியும் வித்தியாசம் தெரியாமல் பெருந்துகள் ஆக ஒன்றிணைந்திருப்பதும் தெரிந் தது,

இனிப்பு எடுத்துக் கொள் நிம்மி.

செண் திரேசா வெண்ணெய் விழுது பிசுபிசுவென்று நாவில் படிந்து தொண்டைக்குள் இறங்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தது.லெவி   இடுப்பில் கைவைத்து அங்கே தொங்க விட்டிருந்த தண்ணீர் போத்தலை மெல்ல இழுத்தேன் அவன் திரும்பி என்ன என்று பார்வையால் கேட்டான். தண்ணீர் என்றே ஈன சுவரத்தில். வேறே எதோன்னு நினைச்சேன் என்றான் மாறாத சிரிப்போடு,

 ஆக லெவி சீனியர் கல்லறை புதுப்பிக்கப்பட்டு,  நல்ல சுத்தமாக எலும்புகள் துடைக்கப்பட்டு, புது துணி உடுத்தப்பட்டு, அவருக்கு பிரியமான சென் தெரெசா இனிப்பு ஊட்டப்பட்டு எல்லோருக்கும் ஆசிரோடு காத்திருப்பது அவர் உயிரான பாரம்பரிய இசை கேட்க. இதோ அவருக்கு வாழ்வில் அர்த்தத்தை போதித்த ஸ்பானிஷ் ஃபிளமெங்கோ இசை Spanish Flamenco music,

புதிதாக வந்திருந்த நான்காவது சேவகன் லெவியின் கையில் ஒரு பழைய கிடாரை கொடுத்தான். மீட்டியாச்சு தானே என்றபடி கிடார் தந்தியை விரல் கொண்டு பிரியமாக அதிரச் செய்தான். கல்லறை மண்தரையில் சிறு காற்றாக எழுந்து வெளி வந்த இசையை வழிநடத்தி கிதாரை மிருதுவாகத் தொடர்ந்து வேகம் உயர்த்தினான்.

அய்யர் வூட்டு பொண்ணு, கவனிக்கறியா ஆரோகணம் அவுரோகணம் ?                                         

கல்லறை மண்ணிலிருந்து புகை உருவில் ஓர் ஐரோப்பியன் என்னோடு  தென் இந்திய பாரம்பரிய இசை   ஸ்பெயின் பாரம்பரிய இசையை சந்திக்கும் இடத்தை சுவரம் துல்லியமாக புலப்படுத்துகிறான்.

மாயாமாளவ கௌளம். சரியா?

உற்சாகமாகக் கூவினேன். எல்லோரும் என்னையே பார்ப்பது புலப்பட சும்மா இருந்தேன். அய்ரூட்டு பொண்ணுக்கு சங்கீதம் தெரியாதா என்ன?

கல்லறைக்குள் ஒரு கர்னாடக சங்கீத பிரியர் இருக்கார் போல இருக்கு. 

எல்லாம் பெரியவா ஆசிர்வாதம் என்று கை கூப்பினேன்.

என் மகன் உன்னை கட்டிக்கப் போறானாமே,,  இப்ப ஒன்னை கட்டி இருக்கப்பட்ட ஜெர்மன் துரையை என்ன செய்ய உத்தேசம்? என் மகனுக்குத்தான் புத்தி கெட்டு போச்சு, உனக்கு எங்கே போச்சு? அப்புறம் உங்க இஷ்டம்.

மணல் சன்னமாக உதிர்ந்து காற்றில் கரைய நான் உறைந்து அமர்ந்திருந்தேன்.

தொடரும்

றெக்கை

றெக்கை –  அத்தியாயம் 25 றெக்கை- அத்தியாயம் 27
Exit mobile version