ஜூலை கடிகை

மறைக்கப்பட்ட கண்கள்

‘வெர்னர் ஹெர்சாக்: விளிம்பின் பெருவலி’ – சொர்ணவேல் எழுதும் அடுத்த கலை ஆய்வும் + இலக்கிய அனுபவமும் சொல்வனம்; இணைய இதழில் ஆகஸ்ட் 9 முதல் தொடராக வெளியாகிறது


ஜெர்மனியின் தனித்துவமான திரைப்படக் கலைஞரான வெர்னர் ஹெர்ஸாகின் கனவுகளும் வேட்கைகளும் நிறைந்த உலகத்திற்குள் இந்தப் புதிய தொடர் நம்மை அழைத்துச் செல்கிறது. இந்தப் பதிவு அவரை ஒரு கவிஞராகவும் உண்மையைத் தேடும் பயணியாகவும் கொண்டாடும் முயற்சி.

Aguirre, the Wrath of God போன்ற மனதை உலுக்கும் காவியங்களிலிருந்து Grizzly Man போன்ற ஆழமான ஆவணப்படங்களின் அளவற்ற ஆய்வுகள் வரை, ஹெர்ஸாகின் சினிமா மொழியின் தனித்தன்மையை இந்தத் தொடர் ஆராயும் — துயரமும் தரிசனமும் கலந்த ஒரு குரல்.

விமர்சனங்கள், அரிதான காட்சிகள் மற்றும் புதிய பார்வைகள் மூலமாக, இந்தத் தொடர் ஹெர்ஸாக்கை ஒரு சினிமாக்காரர் ஆக மட்டுமல்ல, தத்துவஞானியாக, கிளர்ச்சியாளராக… இயற்கையின் அதிசயங்களுக்கு தன் கண்களைக் கொடுத்த கவிஞராக மீள்பார்வை செய்கிறது.


ஜப்பானியப் பழங்குறுநூறு இலக்கிய நூல்

ஜப்பானின் பழங்காலக் கவிதைகளான கோகின்ஷூ வாக்கா (Kokinshū waka) கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த நூறு கவிதைகளை எஸ். கமலக்கண்ணன் தமிழில் மொழிபெயர்த்தார். அது இப்பொழுது புத்தகம் ஆக வெளியாகிறது

ஜப்பானிய அரண்மனை வாழ்க்கையிலிருந்தும், இயற்கை மாற்றங்களிலிருந்தும் வரும் நுட்பமான பார்வைகளை இந்தக் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. இது தமிழ்க் கவிதை மரபுகளுடன் பல இடங்களில் ஒத்துப்போகிறது. திறமையான மொழிபெயர்ப்பும் தெளிவான விளக்கங்களும் மூலம், ஜப்பானிய இலக்கிய மரபுகளை இனிமையாக உணர முடிகிறது.

ஜப்பானிய கவிதைகள் தொகுப்பான ஹயக்குனின் இச்ஷு (Hyakunin Isshu, நூறு கவிஞர்களின் நூறு பாடல்கள்) எனப்படும் தொகுப்பிலிருந்து கவிதைகள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலக்கவிதைகள் ஏழாம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை வரையிலான காலத்தைச் சேர்ந்தவை.

ஜப்பானியப் பழங்குறுநூறு உணர்வுகள், இயற்கை, தனிமை ஆகியவற்றின் சக்திவாய்ந்த சித்தரிப்புகள் மூலம், ஜப்பானிய-சங்கத் தமிழ் கலாச்சாரப் பாலமாக அமைந்துள்ளது.

முன்னுரையில் இருந்து பேராசிரியர் சிற்பி பாலசுப்ரமணியம்

ஜப்பானியப் பழம்பாடல்களை அறிந்துணர்ந்து சொல்லவும் தகவல்களைச் சரியாக எடுத்துரைக்கவும் (Authentic and Authoritative) இவரைப்போல் வல்லவர் மிகச்சிலரே இருத்தல் கூடும். கவிதைகளின் ஜப்பானிய வடிவம். கவிஞரின் வரலாறு, பாடலின் பொருள் ஆகியவை விளக்கப்பட்டபின் தமிழ் மொழிபெயர்ப்பு வெண்பா வடிவில் தரப்பட்டுள்ளது. ஜப்பானிய இலக்கியம் இயற்கையையும் மனித உணர்வையும் விட்டு ஒருபோதும் விலகி நிற்பதில்லை. நம் சங்கக் கவிதையின் நுட்பமும் அதுதானே! எனவே, அடித்தளத்தில் இரண்டும் தோழமை கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டிக்கொண்டே செல்கிறார். பழம்பெரும் பண்பாடுகள் இரண்டையும் சந்திக்கவைத்துச் சிந்திக்க வைக்கிறார் ச. கமலக்கண்ணன்.


லோகமாதேவியின் புதிய நூல்கள்

நுண்ணுயிருலகு

அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பொள்ளாச்சி

விலை: ₹ 200 

மனிதகுல வரலாற்றுடன் பின்னிப் பிணைந்திருக்கும் நுண்ணுயிரிகளைக் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. இந்தக்கட்டுரைகள் மூலம் நுண்ணுயிர்களின் வரலாற்றை மீள்பார்வை செய்வதோடு நுண்ணுயிரிகளுடன் இணைந்து வாழ்வத்ற்குப் பின்னால் உள்ள அறிவியலையும் அறிந்து கொள்ளலாம். .நரமாமிசம் உண்பவர்களின் மூளையில் தங்கி நோயுண்டாக்கும்  கிருமி, இந்தியாவில் ஹெச் ஐ வி தொற்றை முதன்முதலில் கண்டறிந்த இரண்டு பெண்கள், பெனிசிலியம் , ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அகார் அகார் கண்டுபிடிப்பு,  உயிர்காக்கும் மருந்தளிக்கும் ஒரு பயிர்நோய்ப்பூஞ்சை, டைபாய்டை பலருக்குப்பரப்பிய டைபாய்டு மேரி உள்ளிட்ட  சுவாரஸ்யமான  கட்டுரைகள் அடங்கியது.

மலர்ப்பித்து

அகநி வெளியீடு . ₹220

18-ம் நூற்றாண்டில் ஆண் வேடமிட்ட பெண் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட  காகித மலர், உலகின் முதல் பொருளாதார குமிழிவெடிப்புக்கு காரணமயிருந்த ட்யூலிப்கள், உலகின் மிக மோசமான களையான பார்த்தீனியம், பல கலாச்சாரங்களுடன் இணைந்திருக்கும் எருக்கமலர், மிகையாக மலர்ந்து உடனே முழுக்க அழியும் மூங்கில், வெனிலா மலர், ஜப்பானிய இகபானா உள்ளிட்ட பல மலர்களின் சுவாரஸ்யமான  வரலாற்றையும் தாவர அறிவியலையும் சொல்லும் கட்டுரைகளின் தொகுப்பு

மரங்களின் மறைவாழ்வு

காலச்சுவடு வெளியீடு- ₹390

மரங்களுக்கு நினைவாற்றல் உண்டு, நாம் பேசுவதை அவை கேட்கும் அவற்றிற்கு ஒரு மொழி உண்டு, நண்பர்கள் உண்டு. அவற்றால் வண்ணங்களை அறிந்து கொள்ளவும் பார்க்கவும் சிந்திக்கவும் செயல்படவும் முடியும் என ஜெர்மானியகாட்டியலாளர்  பீட்டர் வோலிபென் ஆதாரங்களுடன் விளக்கும் கட்டுரைகளின் தமிழாக்கம்.

தந்தைப்பெருமரம், கல்லெழும் விதை

தன்னறம் வெளியீடு இலவசப்பிரதிகள். 

விரும்புவோர் குக்கூ காட்டுப்பள்ளிக்கு விரும்பிய தொகையை அளிக்கலாம்.

 ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதான தந்தைப்பெருமரமான பாவோபாப், ஆலிவ் மரங்கள்,இந்தியாவுக்கு காபி அறிமுகமான கதை, எகிப்திய பாப்பிரஸ்  மற்றும் தர்ப்பைப்புற்களின் வரலாறு, நீலக்குறிஞ்சி, லினன் அளிக்கும் ஆளிச்செடி,   ஜப்பானிய வஸாபி,. தொன்மங்களில் இடம்பெற்றிருக்கும் தாவரங்கள் எனப்  பல வகையான  தாவரஙகளின் மகத்துவத்தை, தாவர உலகின் அற்புதங்களை விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பு

இந்த நூலினை விலையில்லா பிரதியாக பெற்றுக்கொள்ள கீழ்கண்ட இணைப்பு வழியே தொடர்பு கொள்ளுங்கள்

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeViarPQgwesW5Qd277wWdkLVpyzSAcQKAQ-kkjQh8YM5LvLw/viewform

இந்த முயற்சி மென்மேலும் பல்கிப் பெருக பங்களிப்பை செலுத்த விரும்புவோர் கீழ்கண்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி உதவலாம்.:

  • Gpay -9843870059
  • THUMBI – Current A/c no: 59510200000031 / Bank Name – Bank of Baroda / City – ERODE / Branch – Moolapalayam
  • IFS Code – BARB0MOOLAP (Fifth letter is “Zero”)

சென்ற இதழில்|


Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.