தமிழாக்கம்: கு. அழகர்சாமி
(1) மரங்களின் அமைதியில்லா ஆத்மாக்கள்
பாலையின் மீது பனிமூட்டம் போல்
மரங்களின் அமைதியில்லா ஆன்மாக்கள் தொங்குகின்றன.
மரங்களின்மையின் காட்டில்
பறவைகளின்மை கீச்சிடுகிறது.
சொல்லற்று நடனமிடும் இவ் வன்பாலையில்
தன்னுடலைக் கூனிக்குறுக்கிச் சொல்லின்மை அமர்ந்துள்ளது.
கூடியிருத்தலின் அர்த்தத்தோடு
உடனில்லை நிழல்.
அழிக்கப்பட்ட காட்டின் முடிவில்லாச் சலசலப்பு மட்டுமே
நிழலோடு உடனுள்ளது.
Restless Souls of Trees
Restless souls of trees hang over the desert
Like a mist
In a forest of an absence of trees
An absence of birds twitters
In this wordless dancing wilderness
An absence of words sits crouching its body
The meaning of togetherness is
Not accompanied by a shadow
The shadow is only accompanied by
The unending rustle of a destroyed forest.
–Dilip Chitre

(2) அறுந்த இணைப்பின் உயிரோடிருத்தல்
நீறு பூத்த கனலினுள்ளே வெம்மையின்
அறுந்த இணைப்பின் உயிரோடிருத்தல்
தீப்பிழம்பின் சுருக்குக் கண்ணியுள்ள
நன்கு ஊறிய எண்ணெய்த் திரியின்
வாழ்வு வரையிலான வலியுறுத்தல்
வெற்றாயுள்ள
ஒரு பூவுக்கெதிராய்
ஒரு தேனீயின் போராட்டம்
முப்பருவங்களிலும் வறண்டிருக்கும்
ஒரு கிணற்றின் விரக்தி
இக் கரங்கள் போதுமாயில்லையாயினும்
இத் தழுவல் முழுமையானது.

The Being alive of Broken Threads
The being alive of broken threads
Of heat inside ash-covered embers
The life- long insistence
Of an oil-wick soaked too well
That bears the noose of a flame
The struggle
Of a bee
Against an empty flower
The despondency
Of a well that has been dry three seasons
Notwithstanding these insufficient arms
This embrace is total.
–Dilip Chitre
Source: The Tree of Tongues, An Anthology of Modern Indian Poetry Edited by E.V.Ramakrishnan, Indian Institute of Advanced Study, Rashtrapatinivas, Shimla 1999