மகரந்தம்


[stextbox id=”info” caption=”அறிபுனை சரித்திரம்”]

சுஜாதாவின் ‘என் இனிய இயந்திரா’ நாவலுக்கு எது மூலம் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆதார நாவலை விட தமிழில் வெளிவந்த காலத்தில் இருந்து ஜீனோவும் ஜீவாவும் எப்பேர்பட்ட இடத்தை வாசகரிடம் தக்கவைத்திருக்கிறார்கள்!? அதே போல் ஃபிரான்க் ஹெர்பர்ட் எழுதிய ‘டியூன்’ புதினமும் அரியணையில் என்றுமே அமர்ந்திருக்கும். ஆனால், டியுன் நாவலுக்கு ’பேரின்ப நகரத்திற்கான போர்வாள்கள்’ (The Sabres of Paradise) தூண்டிலாக மூலவித்தாக இருந்தது என்கிறது இந்தக் கட்டுரை. ட்யூன் எடுத்துக் கொண்ட களம் என்னவென்று பார்த்தால் பாலைவனப் பிரதேசத்தினருக்கும் நகரமாந்தருக்கும் நடுவே நெடுங்காலமாக போர் தொடர்ந்து நிலவுகிறது. பாலைவனத்தில் இருப்போரை அரபு நாட்டவராக எண்ணலாம். மேற்குலக நாகரிகத்தின் போர்க்குணத்தையும் அவர்களின் படைக்கருவி விற்பனைகளையும் நகரமாந்தராக எண்ணலாம். வளைகுடா நாட்டின் எண்ணெய் வளம் போல் மெலாஞ் எனப்படும் பதார்த்தத்திற்காக சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள். ருஷியாவில் இருந்த பேரரசின் அடுக்குகளில் இருந்து ஐரோப்பியரின் நிலமானிய அமைப்பு வரை லெஸ்லி பிளான்ச் (Lesley Blanch) விவரிக்கிறார். அதற்கு மதப்போர், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம், நட்சத்திர சுற்றுலா என ட்யூன் வளர்த்தாலும் ஆதார மூலத்தையும் வாசிக்க அழைக்கிறார்கள்.

https://lareviewofbooks.org/article/the-secret-history-of-dune
[/stextbox]


[stextbox id=”info” caption=”வீர்யம்”]

உங்களுக்கு ஐன்ஸ்டீனைத் தெரிந்திருக்கும். அவர் காப்புரிமைச் சான்றிதழ் வழங்கும் கிளார்க் ஆக வேலை பார்த்தது தெரியுமா? ஏ ஆர் ரெஹ்மானும் இளையராஜாவும் நமக்கு எப்படியோ அப்படி ஒரு ஆகிருதியான நபர் ஃபிலிப் கிளாஸ். அவர் டாக்ஸி ஓட்டுநராக பல ஆண்டுகள் வேலை பார்த்தார். இவ்வாறு அறிவியலிலும் கலைத்துறையிலும் சாதித்தவர்கள் தங்களின் மறுபக்கத்தைத் திறந்திருக்கிறார்களா என இந்தக் கட்டுரை அலசுகிறது. மேலே இருப்பது எட்வர்ட் மன்ச் வரைந்த அதிபுகழ் பெற்ற ஓவியமான அலறல் (ஸ்க்ரீம்). அதைக் குறித்து அவர் இவ்வாறு தனது கையேட்டில் எழுதுகிறார்: ‘என்னுடைய இரு நண்பர்களுடன் சாலையில் நடந்தேன். சூரிய அஸ்தமனம் ஆனது. ஆகாயம் ரத்தநிறமானது. மனச்சோர்வு என்னைத் தொட்டதை உணர்ந்தேன். என் நண்பர்கள் என்னைவிட்டு முன்னே நகர்கிறார்கள். என் மார்பில் திறந்த காயம் இருப்பதை போல் பயம் கவ்விக் கொண்டது. சோர்வாக கைப்பிடியில் தளர்ந்தேன். கருப்பும் நீலமும் கலந்த மலையிடைக் கடல் நுழைவழி தெரிந்த நகரத்தின் மேகங்களில் இருந்து ரத்தம் சொட்டி உதிர அலை அடித்தது. இயற்கையினூடே மாபெரும் அலறல் துளைத்து வந்தது.’ அந்த ஓவியத்தைப் பார்த்தால் யாரோ அலறுவதை சித்தரிப்பது போல் இருக்கும். ஆனால், அந்த ஓவியம் தான் மட்டுமே கேட்ட ஓலத்தை, மற்றவர்களுக்குக் கேட்கக் கிடையாத அலறலைக் குறிக்கிறது. அது போல் புத்தாக்கங்களைக் கொணர கொஞ்சம் சித்தம் கலங்கியிருக்க வேண்டுமா என எண்ணும் கட்டுரை:

https://medium.com/anxy-magazine/requiem-for-a-scream-37563496f142
[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.