வாசகர் மறுவினை

quotes

அன்புள்ள சொல்வனம்,

இந்தச் சுட்டிகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ஆற அமரப் படிக்கிறேன். ஒரு பருந்துப் பார்வையில் பட்டது –

1) பைரப்பா பற்றிய குறிப்பிடத் தகுந்த நாவல் அறிமுகம். வம்ச விருட்சாவோடு இவருடைய ‘பருவம்’ நாவலும் பேசப்பட வேண்டியது. பைரப்பாவின் அரசியல் நிலைபாடு குறித்து மாற்றுக் கருத்து இருந்தாலும் அவருடைய எழுத்து நிராகரிக்க முடியாதது.

2) மராத்தி கவிதைகள் – இவையும் குறிப்பிடத் தக்கவை. இன்னும் காத்திரமான கவிதைகளாக எடுத்துக் கொண்டிருக்கலாமோ? நான் அருண் கொலட்கரின் ஆங்கிலக் கவிதைகளை முழுவதும் மொழிபெயர்த்திருக்கிறேன் (ஜெஜூரி, கருப்புக்குதிரை சந்திப்பு, சர்ப்ப யாகம்), ஆனால் அவருடைய உன்னதமான மராத்தி கவிதைத் தொகுப்பு சிரிமிரியில் இருந்து ஒரு சிலவே மொழிபெயர்க்கக் கிடைத்தன. அந்தத் தொகுதியைத் தமிழாக்கம் செய்தால் நல்ல கவிதையை தமிழில் அறிமுகப்படுத்திய புண்ணியம் கிட்டும். அது போல் திலீப் சித்ரேயின் ஆங்கிலக் கவிதைகள் சில தவிர மற்றவையும் மொழிபெயர்க்கத் தகுதியானவை.

3) அறிவியல் கட்டுரைகள் நன்கு எழுதப்பட்டுள்ளன. முக்கியமாக ‘நேரம் சரியாக’.

மற்ற பகுதிகளையும், சொன்னேனே, ஆற அமரப் படிக்கிறேன்.

அன்புடன்

இரா முருகன்