மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பு – முன்பதிவுத் திட்டம்

மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பை (ம.வீ.ராமானுஜாச்சாரியார்) நவீன முறையில் அச்சிட்டு ஒன்பது பாகங்களாக வெளியிட ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு.வெங்கட்ரமணன் அவர்கள் திட்டமிட்டுள்ளார். இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிப்பதும் முடிக்காததும் உங்கள் கையில்தான் உள்ளது.

இந்நூல் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் நன்கு தேர்ச்சி பெற்ற பல அறிஞர் பெருமக்களால் நேரடியாக சமஸ்கிருதத்தில் இருந்து ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட முழு வியாச பாரதமும் (பதினெட்டு பருவங்களும்) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ம.வீ. இராமானுஜாசாரியார் அவர்களால் தொகுக்கப்பட்டன. மஹாபாரதம் எளிய தமிழ் மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதற்காக தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைப் பல அறிஞர் பெருமக்கள் இந்தப் பணிக்காகச் செலவழித்துள்ளனர். இம்மொழிபெயர்ப்பு ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்கள் நடைபெற்றது. ஒருவர் மொழிபெயர்ப்பது அவராலேயே சரி பார்ப்பது பிறகு இரண்டு சமஸ்கிருத அறிஞர்களால் மீண்டும் சரிபார்ப்பது என்று மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு.

mahabaratham

விலைவாசி உயர்ந்த இன்றைய காலகட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் பதிப்பித்தால் மொத்தத் தொகுப்பின் (ஒன்பது பாகங்கள்) விலை ரூ.5000 க்குக் கொடுப்பது சாத்தியம் இல்லை. எனவே குறைந்தது முந்நூறு பேருக்கும் மேல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் இணைந்தால்தான் எல்லோருக்கும் குறைந்த விலைக்குக் கிடைக்க வழி செய்யலாம்.

இதுவரை கிட்டத்தட்ட நூறு பேர் இந்தத் திட்டத்தில் இணைவதாக உறுதியளித்துள்ளார்கள். குறைந்தது முந்நூறு பேராவது முன்வெளியீ்ட்டுத் திட்டத்தில் இணைந்தால்தான் பதிப்பாளர் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

முன்வெளியீட்டுத் திட்டத்தில் இணைபவர்களுக்கு மொத்தத் தொகுப்பின் விலை ரூ.5000. இணையாதவர்களுக்கு இதன் விலை ரூ6000 அல்லது அதற்கு மேல் இருக்கலாம் என்று பதிப்பாளர் கூறியுள்ளார். (குறிப்பு: தபால் செலவு தனி. இதில் அடங்காது). தபால் செலவைப் பின்பு செலுத்திக் கொள்ளலாம். முடிந்தவர்கள் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தப் பதிப்பு புதிதாக நேர்த்தியான முறையில் தட்டச்சு செய்யப்பட்டு  வெளிவர இருப்பதால் ஏழு மாதங்களிலிருந்து ஒரு வருடம் காலம் வரை ஆகலாம். இந்தத் திட்டத்தில் குறைந்தது முந்நூறு பேர் சேரவில்லை என்றால்  இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதும் செல்லாததும் பதிப்பாளரினின் முழு முடிவில் உள்ளது. முன்னெடுத்துச் செல்ல முடியாத பட்சத்தில் அதுவரை பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும். மீதித் தொகை வட்டியில்லாமல் திருப்பிக் கொடுக்கப்படும்.

சில பர்வங்களின் பகுதிகளை இந்த இணையத்தளத்தில் காணலாம்.

ஸ்ரீமஹாபாரதம் – எழுபத்தெட்டாவது அத்யாயம் – தீர்த்தயாத்ரா பர்வம்

அவர்கள் அனைவரும், (கோக்கப்பட்ட) நூல் அறுந்த ரத்னங்கள் போலவும் சிறகுகள் வெட்டப்பட்ட பக்ஷிகள் போலவும் மகிழ்ச்சியற்ற மனமுள்ளவரானார்கள். புகழத்தக்க செய்கைகளை உடைய அந்த அர்ஜுனனால் விடுபட்ட அந்த வனமானது, குபேரனால் விடுபட்ட சைத்ரரதமென்னும் உத்யான வனம் போலாயிற்று. ஜனமேஜயரே! ஆண்மையிற் சிறந்தவர்களான அந்தப் பாண்டவர்கள் அந்த அர்ஜுனனை விட்டுப் பிரிந்ததனால் ஸந்தோஷத்தை அடையாதவர்களாவே காம்யக வனத்தில் அப்பொழுது வஸித்து வந்தனர். பரதர்களுள் சிறந்தவரே! பிராம்மணர்களுக்காகப் பராக்கிரமம் செலுத்துபவர்களும் மஹாரதர்களும் புருஷ ஸ்ரேஷ்டர்களும் பகைவரை அடக்குகிறவர்களுமான (பாண்டவர்கள் கானகத்தில்) மிக அலைந்து சுத்தமான பாணங்களால் யாகத்துக்குத் தக்கவையான பலவித மிருகங்களைக் கொன்று வனத்தில் கிடைப்பதான (அந்த) ஆகாரத்தைக் கொண்டுவந்து நாள்தோறும் பிராம்மணர்களுக்குக் கொடுத்தார்கள்.

எழுபத்தொன்பதாவது அத்தியாயம்

ஸாவித்ரி வேதங்களை விட்டு விலகாதது போலவும் சூரியனுடைய ஒளி மேரு மலையை விட்டு விலகாதது போலவும் திரௌபதியானவள் குந்தீபுத்திரர்களான தன் கணவர்களை (தான் நடந்து கொள்ள வேண்டிய) முறையில் விட்டு விலகாமலிருந்தாள். பிறகு, தவறாதவரான யுதிஷ்திரர் அர்கயத்தையும் பாத்யத்தையும் கொண்டுவந்து அபிவாதனம் செய்தார்.

முன்வெளியீட்டுத் திட்டம் விவரம்

மஹாபாரதம் கும்பகோணம் ம.வீ.ரா பதிப்பு

மொத்தம் ஒன்பது பாகங்கள். கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் பக்கங்கள். எடை கிட்டத்தட்ட பதினைந்து கிலோ.

முன்வெளியீட்டுத் திட்டத்தில் சேர்பவர்களுக்கு விலை ரூ.5000

பணம் செலுத்துபவர்கள் ஒரு முழுத் தொகுப்புக்கு ரூ.5000 கேட்பு வரைவோலையாகவோ (DD) அல்லது காசோலையாகவோ (cheque) “S.Venkataramanan  payable at Chennai” என்ற பெயரில் கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும். வரைவோலையாகவோ அல்லது காசோலையாகவோ செலுத்தும்போது பின்புறம் தங்களின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைக் கண்டிப்பாகக் குறிப்பிடவும்.  தனியாக கீழ்க்கண்ட விவரங்களைத் தெரிவிக்கவும்.

1) பெயர்

2) முழு முகவரி

3) தொலைபேசி எண்

4) மின்னஞ்சல் முகவரி

5) காசோலை அல்லது கேட்பு வரைவோலை எண்

6) வங்கியின் பெயர்

7) தேதி

8) வங்கிக் கிளையின் பெயர்

9) எத்தனைத் தொகுப்புகள் வேண்டும்

10) மொத்தத் தொகை (ஒரு முழுத் தொகுப்புக்கு ரூ.5000)

பதிப்பாளர் சென்னையில் இருப்பதால் காசோலை செலுத்துபவர்கள் சென்னையில் வங்கிக் கணக்கு உள்ளவர்கள் உள்ளூர் காசோலையை அனுப்பலாம். இல்லை என்றால் சென்னையில் பணம் எடுக்கும்போது பணப்பிடிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் (at par cheque or multi city cheque).

தாங்கள் அனுப்பிய காசோலை அல்லது கேட்பு வரைவோலை கிடைத்தவுடன் பணம் செலுத்தியதற்கான ரசீதை பதிப்பாளர் தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைப்பார்.

மேலும் ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி  – mariappan.balraj@gmail.com
S. VENKATARAMANAN
NEW NO: 9 – OLD NO:135
NAMALVAR STREET, EAST TAMBARAM
CHENNAI 600 059. INDIA
PHONE NO: 9894661259

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.