அற்புத மானுக்கு முடிவில்லாத வேட்டை

அவன் மோசமாக ஒப்பிக்கிறான், மூக்குக் கண்ணாடியை அடிக்கடி நேராக்கியபடி. ஆனாலும் மனதைத் தொடுகிறான். எனக்குப் புரிந்தது.. அவன் என்ன உணர்கிறான் என்பது எனக்குப் புரிந்தது. அவனுடைய இடைவிடாத உடல் கோணல்கள், அந்தக் கண்ணாடி, அவனுடைய அதிர்வுகள்.. ஆனால் அவன் என்ன ஒப்பித்தான் என்பதை நான் சுத்தமாக மறந்து விட்டேன், அது ஏன் முக்கியமாக இருந்தது என்பதையும் மறந்து விட்டேன். உணர்ச்சிகள் தனிப் பிறவிகள்- கஷ்டப்படுவது, காதல், மென்மையாக உணர்தல். அவற்றுக்குத் தமக்கென வாழ்வு இருக்கிறது; நாம் அவற்றை உணர்கிறோம், ஆனால் நாம் அவற்றைப் பார்ப்பதில்லை. நீங்கள் திடீரென்று வேறு ஒருவரின் வாழ்வில் ஒரு அங்கமாகி விடுகிறீர்கள்,

ஸ்வெட்லானா அலெக்ஸவிச் – என் நாட்குறிப்பிலிருந்து

கிராமப்புறப்பெண்கள் சிலர் அவனருகே சென்று உட்கார்ந்தனர். அவர்களுக்கே உரிய இயல்புடன் புது முகங்கள் யார் எங்கு செல்கிறார்கள் என விசாரித்தனர். ராணுவச்சிறுவனை அவனது வீட்டுக்கு ஆபிஸர் அழைத்துசெல்வதை அறிந்துகொண்டனர். அவனது மனம் பேதலித்துவிட்டது: ‘காபூலிலிருந்து கிளம்பியதியலிருந்து அவன் நோண்டிக்கொண்டே இருக்கிறான். கையில் கிடைத்த அனைத்தையும் கொண்டு நோண்டுகிறான். முள்கரண்டு, மண்வெட்டி, குச்சி, பேனா..எதைக்கொடுத்தாலும் நோண்டுகிறான்’.