வெங்கட்  சாமிநாதன்: விமர்சன படைப்பாளி

தமிழனின் கலாச்சார வறுமையை சுட்டிக்காட்டுமுகமாக அதிரடியான விமர்சனங்களையும் செய்தார். தமிழர்களிடம் கலையில்லை எல்லாமே தொழில் திறன் தான் என்றார். தனித்துவமிக்க பார்வை வெளிப்படாததால் சிற்பம், ஓவியம, கட்டடம் போன்றவற்றில் கலை உருவாகவில்லை என்றார். இது ஒப்புக் கொளக் கூடியதல்ல. கூட்டு முயற்சி கலைக்கு எதிரானதல்ல. இசை, நடனம் ,நாடகம், சினிமா, கட்டடம் போன்றவை ஒரு தலைமைக்கு கீழ் செயல்படுபவை….அதே சமயம் கலைத்திறமைக்கும் தொழில் திறனுக்கும் அவர் கொடுத்த விளக்கம் எனக்கு ஏற்புடையதாக இருந்தது. சூழ்ச்சிக்காரனான தச்சன் செய்கிற நாற்காலி நேர்த்தியாக இருக்கும். அங்கே தொழில் திறன் இருந்தால் போதும் ஆனால் ஒரு வன்புணர்வில் இடுபடுபவன் ராமாயணத்தின் சிறப்பை ஓத முடியாது. அவன் சத்திய தரிசனம் அற்றவனாக இருக்கும் பட்சத்தில் அது சிறக்காது என்று எடுத்துக் கூறினார்.

புனைவாற்றல் மிக்க வாழ்வியல் கட்டுரைகள்

`நான்` என்கிற அடையாளத்துடன் அவரது கட்டுரைகள் வெளிவந்தாலும் தன்னைப் பற்றிய பிரதாபங்கள் எவற்றையும் அவர் அதில் விட்டுச் செல்வதில்லை. தன்னைப்பற்றி அவர் எங்கேயும் பெருமிதம் கொள்வதில்லை. அரசியல் நிலைப்பாடு என்று எதையும் அவர் எடுப்பதில்லை. ஆனால் மனித செயல்பாடுகளின் நாகரிகம் குறித்த ஓர் உள்ளார்ந்த அரசியல் நோக்கு அவரது எழுத்துகளில் ஆங்காங்கே வெளிப்பட்டுக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது. அதிர்வின்றி எதையும் நிதானமாகப் பார்க்கும் அவரது எழுத்துகள் எல்லாத் தரப்பு வாசகர்களையும் கவர்கிறது. இன்றும்கூட ஒரு கட்டுரைத்தொகுப்பிலோ பண்டி