பரிவே ஆதார சுருதியாக வாழ்ந்து மறைந்த சார்வாகன் பற்றி

இந்திய தத்துவம், பண்பாட்டு வரலாறு ஆகியவை குறித்த அவரது ஆழ்ந்த அறிவு இந்திய எதார்த்தத்தின் பல தள இயக்கத்தை எளிதாகக் கைப்பற்றி படைப்புலகக் கருப்பொருளாக அமைக்க உதவியிருந்தது. இதனால் அவரது புனைவுகளில் அவை புராணத் தன்மை கொண்டதாக அமைந்தன, ஆனால் தொன்ம குணம் கொண்டு அமையவில்லை. அவருடைய வாழ்வு நெடுக இருந்த பரிணாமத் தன்மை கொண்ட தேடலை எந்த சக்தி உந்தியது என்று பார்க்க முயன்றோமானால், அது அவருடைய விசாலமான பரிவுணர்வாகத்தான் இருக்க முடியும் என்று தெரிய வரும்.