மற்றவர்களின் வாழ்வுகள்

எழுதுவதற்குத் தேவை விவரச் சேமிப்பும், அதில் கிட்டும் அறிவும்தான் என்றால் கலைஞர்களின் எல்லாச் சங்கடங்களும் மேன்மேலும் ஆராய்வு செய்தால் தீர்ந்துவிடும்; கற்பனை என்பது கணக்கிலேயே வராது. எழுதுவதற்கு ஒரு எழுத்தாளரை உந்துவது எது என்றால், அது தன் விவர ஞானம் குறித்த அவரது தன்னம்பிக்கை இல்லை. மாறாக, அவர் தனக்கும் பாத்திரங்களாகப் போகிற நபருக்கும் (அல்லது நபர்களுக்கும்) இடையே சக்தி வாய்ந்த ஒரு பிணைப்பை உணர்கிறார், அந்தப் பிணைப்பு இடர்கள் நிறைந்த அந்தப் பயணம் மேற்கொள்வதைப் பயனுள்ளதாக்குகிறது.