மதப் போர்கள்

2014 ஆம் ஆண்டில் ஜூன் மாதம், அல் கைதாவிலிருந்து உடைந்து போன ஒரு குழு, குறிப்பிடும்படியான வகையில் கொடூரமான குழு எனலாம், இந்தக் குறிக்கோளை அடைந்தது, ஆனால் தன் மூலக்குழுவைப் பகைத்துக் கொள்ளவும் செய்தது. ஈராக்- சிரியாவின் எல்லைப் பகுதியின் இருபக்கங்களிலும் பெரும் நிலப்பரப்பை வென்று கைப்பற்றிய, இஸ்லாமிச அரசு என்ற இந்தக் குழு, தன் தலைவரான அபு பக்ர் அல்- பாக்தாதி இனிமேல் காலிஃப் இப்ரஹிம் என்று அறியப்படுவார் என அறிவித்தது…. இந்தப் புது காலிஃபும் அவரது சகாக்களும் இறுதித் தீர்ப்பு வரும் நாளுக்காகத் தயாரிப்புகளில் இறங்கி இருக்கிறார்மள். அது உடனே வரவிருக்கிறது என்று இவர்கள் நம்புகிறார்கள், இந்த நாளில் மார்க்கத்திலிருந்து தவறியவர்களும், சிலை வணக்கம் செய்வாரும் உலகிலிருந்து அழிக்கப்பட்டு உலகு சுத்திகரிக்கப்படும் என்றும் நம்புகிறார்கள்.