யாருற்றார்,யாரயலார்?

பல நேரங்களில் நம்மை நாம் நேசிப்பதும், நம்மை நாமே வெறுப்பதும் நடக்கிறது. தன் கோட்பாட்டிற்கும், அதையே வேறு விதக் கோட்பாடாகச் சொல்லி தன்னுடன் தானே சண்டையிட்டவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டென். பொது சார்பியல் கோட்பாட்டில் 1915ல் அவர் காலவெளியில் சக்தியையும், ஆற்றலையும் பற்றிப் பேசினார். சூரியன், பூமி போன்ற பெரிய பொருட்கள், தாம் நின்று கொண்டு சுழலும் காலவெளியை, தம் எடையினால் கீழ் நோக்கி வளைப்பதால் ஏற்படுவதே ஈர்ப்பு விசை என்பது அந்தத் தேற்றம். அவரே 1905ல் குவாண்டம் இயக்கவியலின் அடிப்படையைச் சொன்னவர்.