நூற்றாண்டுகள் தாண்டிய அந்த அரச மரத்தினடியில் கால் மடக்கிச் சம்மணமிட்டு அமரும் வேளை மழை விம்மிச் சாரலாய் இறங்கிக் காற்று சில்லென உடல் ஊடேறிற்று. பெருமரத்தண்டின் உட்புறமாக மடிந்திருந்த மரயிடுக்கின் உள்ளே மேலும் நுழைந்து போய் அமர்ந்து கொண்டார். ஏதோவொரு முன்னுணர்வு, அவ்விரவில் பல்லாண்டு காலத் தவத்திறத்தின் பயனாக இம் மானுடனுக்கு அர்த்தமிக்கதொரு ஞானதரிசனம் வாய்க்குமென்று. குசா புல்மெத்தை மேல் இன்னும் வசதியாகக் கால்மடக்கித் தன்னை அமர்த்தி முதுகு நிமிர்த்தித் தவத்தில் நிலைக்கத் தொடங்கினார்.
Tag: வி . அமலன் ஸ்டேன்லி
போதி மரத்தடியில்
இந்த அறிதலுக்கு, வெளியிலிருந்து சான்றுகள் ஏதும் தேவையற்று இருக்கிறது. பொருள்களை அறியத்தான் வெளிச்சம் தேவையாகிறது. வெளிச்சத்தை இன்னொரு வெளிச்சம் கொண்டு அறியத் தேவை இல்லை. இவ்வறிதல்களை அறிந்துணர்ந்து கடந்துசெல்வது ஞானம் என்றால் அது அளிக்கும் உயரிய கொடை என்பது விடுதலையே என்றாகிறது.
