சரோஜா ராமமூர்த்தியின் ‘வடு’ சிறுகதை

கதையில் வரும் கணவனும் absolution பெறத் தான் முயற்சிக்கின்றானோ? பெண்களுக்கான வெளி  மறுக்கப்படுவதற்கு தான் காரணம் அல்ல, அதற்கு  தான் குற்றவாளி அல்ல என்பதை நிறுவ தான் அவன் முயல்கிறானா? எனில் அவன் போலியா? இன்று அவனைப்பற்றிய விமர்சனம் எப்படியிருக்கக் கூடும்? மனைவிக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று அவன் சொல்வதிலுள்ள agency, பெண்ணிற்கு கிடையாதா, அவளுடைய ஒப்புதல்/consent பற்றி சிந்திக்காதவன் என்று இன்றைய கலாச்சார சூழலில்/ zeitgeistல்  புழக்கத்தில் உள்ள சொற்களை அவன் மீது சுமத்தலாம்.