“Mission impossible போல இருக்கிறதே. யார் சார் அந்த டாம் க்ரூஸ்?”

This entry is part 4 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

நம்முடைய பால்வெளி மண்டலத்தின் நடுவில் மிகப் பெரிய கருந்துளை, அதாவது 4 மில்லியன் (Sgr A*) சூரிய திண்மை ( 4 million solar masses) இருப்பது, பிற்காலத்தில் உறுதி செய்யப்பட்டது. ஆனால், அது நம்முடைய சீரான இயக்கத்தை உருவாக்க காரணமாக இருந்ததே தவிர, ஈர்ப்பு அலைகளை உருவாக்குவதில்லை. இதை மிகத் தெளிவாகப், புரிந்து கொள்ளுதல் அவசியம். ஒரு பெரிய கருந்துளை இருப்பதனால், எந்த வித தாற்காலிக ஈர்ப்பு அலையும் உருவாக்கப்படுவதில்லை.