நகைப்பாடம் – பார்கின்சனின் விதி

பணம் படைத்தவர்கள் எல்லோராலும்  ‘பணக்காரன்’ என்ற பட்டத்தை அடைந்துவிட முடியாது. ‘பணக்காரன்’ என்பது ஒரு தனித்துவ வட்டத்தின் உறுப்பினர்களுடைய பெயர், அதில் இடம் பிடிப்பது கடினம் என்கிறார் பார்கின்சன். ஒரு சீன கோடீஸ்வரரை சந்தித்த போது அந்த சீனர், “கூலிக்காரன் பணம் சம்பாதிக்க முடியும் ஆனால் ஒரு பணக்காரனால்தான் பணக்காரனைப்போல வாழ முடியும்” என விளக்கங்கள் கொடுக்காமல் சொல்கிறார்

ஆட்டத்தின் ஐந்து விதிகள் – மூன்றாம் விதி

பத்து நிமிடங்களுக்கு நண்பனின் அப்பா பயன்படுத்திய கடுஞ்சொற்கள்தாம் விஷயத்தை விபரீதமாக்கின – “உன் முகத்தில் ஏமாளி என எழுதி ஒட்டியிருக்கிறது , உனக்கு பணத்தின் அருமை தெரியவில்லை, நீ சம்பாதித்திருந்தால் தெரியும் அதன் அருமை, ஒரு சட்டை வாங்கத் துப்பில்லாத நீ எப்படி வேலைக்குப்போய் குடும்பத்தைக் காப்பாற்றப் போகிறாய்? கல்லூரிக்குப் போகப்போகிறாயா , கூத்தாடப் போகிறாயா ? “ – இன்னும் எழுத முடியாத அளவுக்கு வார்த்தைகள்.